For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டாய்ட்டீங்களோ… பேசாம நிறைய தண்ணி குடிங்களேன்.. ஸ்லிம் ஆய்ருவீங்க!

Google Oneindia Tamil News

லண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் தண்ணீர் அதிகமாக குடித்தால் உடல் பருமனை பெருமளவில் தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒபசிட்டி என்னும் உடல் பருமன் பிரச்சினைதான் சர்வதேச அளவில் மக்களைப் பெருமளவில் பாதிக்கும் ஒரு காரணியாக இருந்து வருகின்றது.

அதிகமான உடல் எடையால் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பல நோய்களுக்கு வழிவகை உண்டாகின்றது.

உணவுக் கட்டுப்பாடுகள்:

உணவுக் கட்டுப்பாடுகள்:

இதனால் உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டு தங்களை வருத்திக் கொள்கின்றனர்.

இனி உடற்பயிற்சி தேவையில்லை:

இனி உடற்பயிற்சி தேவையில்லை:

இனி இப்படியெல்லாம் உடலினை வருத்திக் கொள்ளவே தேவை இல்லை என்று ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் உணவு மற்றும் சுகாதரத்துறை பேராசிரியர் சூசன் செப் தலைமையிலான நிபுணர்கள் தங்களுடைய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் அதிகம் அருந்தவும்:

தண்ணீர் அதிகம் அருந்தவும்:

இவர்களுடைய ஆய்வின்படி பழச்சாறுகள், செயற்கை குளிர்பானங்கள் ஆகியவற்றை அருந்துவதைத் தவிர்த்து விட்டு அதிக அளவில் குடிநீர் அருந்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறையும் சர்க்கரை அளவு:

குறையும் சர்க்கரை அளவு:

இதனால், உடலில் சக்கரையின் அளவு குறைந்து உடல் பருமன் குறையும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறையை கடைபிடிப்பதன் மூலம் இளம்வயதில் இருந்தே உடல் பருமனைத் தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Parents should replace juice and fizzy drinks with jugs of water at mealtimes, diet experts have advised, to reduce their children’s sugar intake and cut their risk of obesity, high blood pressure and diabetes. Senior health scientists said today that sugar-sweetened drinks were the biggest source of sugar intake across all ages, but were a particular problem among children and teenagers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X