For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் இவங்களத்தான் கப்புன்னு பிடிக்குமாம்.. ஹு எச்சரிக்கை

Google Oneindia Tamil News

ஜெனிவா: மது அருந்துவது கொரோனா வைரஸ் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Recommended Video

    கொரோனாவுக்கே இப்டி ஒரு பாதிப்பா.. நிலைமை இப்படி ஆகிடுச்சே!

    கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அமெரிக்காவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாய நிலையில் இருப்பதால் அமெரிக்கா முழுவதும் மது விற்பனை கடுமையாக உயர்ந்துள்ளது, ஸ்பிரிட்ஸ் மற்றும் காக்டெய்ல்கள் மதுபானங்கள் அதிக அளவு விற்பனையாகிறது.

    கள்ளச்சாராயம்

    கள்ளச்சாராயம்

    ஆனால் அதேநேரம் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுவிற்பனை என்பது பெரும்பாலான மாநிலங்களில் இல்லை. எனினும் மக்கள் கள்ளச்சாராயம் வாங்கி பருகி உயிரையும் இழந்து வருகிறார்கள். இந்நிலையில் உலக சுகாதார மையம் மது அருந்துவது குறித்து அதிர்ச்சிகரமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

    கிருமி நாசினி

    கிருமி நாசினி

    மது அருந்துவது மக்களை கொரோனா வைரஸுக்கு அதிக ஆபத்தில் தள்ளக்கூடும் என்றும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதாகவும், உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பொதுவாக ஆல்கஹால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சோப்பு திரவங்களில் ஒரு கிருமிநாசினியாக வேலை செய்கிறது, ஆனால் அதிகப்படியான ஆல்கஹால் உண்மையில் கொரோனா வைரஸைக் கையாளும் திறனைக் குறைக்கும்.

    ஆல்கஹால் ஆராய்ச்சி

    ஆல்கஹால் ஆராய்ச்சி

    2015 ஆம் ஆண்டு ஆல்கஹால் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது நிமோனியாவுக்கு எளிதில் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் நோயெதிர்ப்பு குறைந்து உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

    நோய் எதிர்ப்பு மண்டலம்

    நோய் எதிர்ப்பு மண்டலம்

    ஆல்கஹால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை சமரசம் செய்கிறது மற்றும் சுகாதார விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது" என்று ஐரோப்பாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய அலுவலகம் செவ்வாயன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் எந்த நேரத்திலும் தங்கள் மது அருந்துவதைக் குறைக்க வேண்டும் என்றும் குறிப்பாக COVID-19 தொற்றுநோய்களின் போது கண்டிப்பாக மது அருந்த கூடாது என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

    ஈரானில் மது அருந்துவது

    ஈரானில் மது அருந்துவது

    முக்கியமாக ஒரு விஷயத்தை உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டுகிறது, என்னவென்றால், ஆல்கஹாலை அதிக அளவு (மூக்கு முட்ட குடிப்பது) அருந்துவது, உடலில் உள்ள கொரோனா வைரஸைக் கொல்லாது, அது மரணத்திற்கே வழிவகுக்கும், அண்மையில் ஈரானில் மது அருந்தினால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என்று பரவிய வதந்தியை நம்பி 44 பேர் கள்ளச்சாராயம் உட்கொண்டதால் இறந்துவிட்டார்கள். அது போல் இறந்துவிடுவார்கள்.

    சுயதனிமை அதிகரிப்பு

    சுயதனிமை அதிகரிப்பு

    மனரீதியாக மிகப்பெரிய போராட்டத்தை ஆல்கஹால் ஏற்படுத்தக்கூடும். சுய-தனிமை அதிகரித்ததன் காரணமாக ஆல்கஹால்-பயன்பாடு அதிகரிப்பது என்பது மிகப்பெரியஆபத்தை ஏற்படுத்திவிடும் மேலும் மது அருந்துவது குடும்ப வன்முறை அபாயத்தையும் உயர்த்தக்கூடும்" என்று உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது. .

    English summary
    WHO points out, alcohol – especially in strong concentrations and large amounts – does not kill the coronavirus in the body, and it can lead to death
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X