For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாற்றத்தின் தொடக்கம்.. லைசன்ஸ் பெற்ற சவுதி பெண்கள்.. இன்று முதல் கார் ஓட்ட அனுமதி!

சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து சவுதி முடி இளவரசர் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ரியாத்: சவுதியில் பெண்கள் இன்றிலிருந்து லைசன்ஸ் பெற்று முறைப்படி கார் ஓட்ட முடியும். அவர்கள் நாட்டின் வரலாற்றில் இது மிகப் பெரிய புரட்சியாக பார்க்கப்டுகிறது.

சவுதியின் நாட்டின் நிறம் மாறிக்கொண்டே இருக்கிறது என்று கூட கூறலாம். அந்த நாட்டில் தற்போது பெண்களுக்கு மிகவும் அதிக அளவில் சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சீர்திருத்தங்களுக்கு பின்பாக சவுதி முடி இளவரசர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார்.

லைசன்ஸ் வழங்கினார்

லைசன்ஸ் வழங்கினார்

சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவது தடை செய்யப்பட்டு இருந்தது. அதை முகமது பின் சல்மான் நீக்கினார். 2018ல் இருந்து பெண்கள் கார் ஓட்டலாம் என்று அவர் அறிவித்தார். பலரும் அவரின் இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

பெரிய எதிர்ப்பு

இந்த அறிவிப்பிற்கு எந்த அளவிற்கு ஆதரவு வந்ததோ அதே அளவிற்கு எதிர்ப்பும் வந்தது. சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் அவரின் இந்த அதிரடி முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அவருக்கு அல்கொய்தா அமைப்பு கொலை மிரட்டல் கூட விடுத்து இருந்தது.

இன்றிலிருந்து

இன்றிலிருந்து

இந்த நிலையில் பல எதிர்ப்புகளையும் மீறி அந்த நாட்டில் பெண்களுக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் இன்றிலிருந்து கார் ஓட்ட அனுமதி பெற்றுள்ளனர். அவர்கள் சந்தோசமாக கார் ஓட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

ராணுவத்தில் சேரலாம்

ராணுவத்தில் சேரலாம்

இந்த புரட்சியை தொடங்கி இன்னொரு முக்கியமான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. பெண்கள் ராணுவத்தில் சேரலாம் என்றும் சல்மான் கூறியுள்ளார். சாதாரண வீராங்கனையாக இல்லாமல் பெரிய பொறுப்புகளும் பெண்களுக்கு ராணுவத்தில் வழங்கப்பட இருக்கிறது. இது அந்த நாட்டில் மட்டும் இல்லாமல் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
Drive lady Drive, Saudi Arabia allows women to get license from today. Already Saudi Arabia has decided to open its first movie theater by 2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X