For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட்டமிட்ட 'டிரோன்'.. 1 மணிநேரம் மூடப்பட்ட துபாய் ஏர்போர்ட்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய விமான நிலைய வான்வெளியில் ஆளில்லா சிறிய ரக விமானம்(drone) ஒன்று பறந்ததால் விமான நிலையம் சுமார் ஒரு மணிநேரம் மூடப்பட்டது.

துபாயில் உள்ள சர்வதசே விமான நிலைய வான் பகுதியில் சனிக்கிழமை ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்று வட்டமடித்துக் கொண்டிருந்தது. இதையடுத்து எப்பொழுதும் பிசியாக இருக்கும் அந்த விமான நிலையம் 69 நிமிடங்கள் மூடப்பட்டது.

Drone closes busy Dubai International Airport for an hour

பின்னர் மதியம் 12. 45 மணிக்கு விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆளில்லா சிறிய ரக விமானங்களால் துபாய் விமான நிலையத்தில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளில்லா சிறிய ரக விமானம் வைத்திருக்கும் தனி நபர்கள் அதை அமீரக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிடப்பட்டது.

பொழுதுபோக்கிற்காக தனிநபர்கள் ஆளில்லா சிறிய ரக விமானங்களில் கேமராக்கள் அல்லது லேசர்களை பொருத்தி துபாயின் சில பகுதிகளில் பறக்க விட அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும் துபாய் விமான நிலைய வான் பகுதியில் ஆளில்லா சிறிய ரக விமானங்களை பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
One of the world's busiest airport in Dubai was closed for an hour on saturday after a drone flew into its airspace.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X