For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் நடனப்போட்டி - காரைக்குடி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம்

துபாயில் நடைபெற்ற நடனப் போட்டிகளில் காரைக்குடி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    15 லட்சத்தை மென்று தின்ற ஆடு | துபாய் நடனப்போட்டியில் தமிழக மாணவர்கள் முதலிடம்- வீடியோ

    துபாய்: துபாயில் நடைபெற்ற நடனப் போட்டிகளில் காரைக்குடி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் கிராமிய நடனப்போட்டிப் பிரிவில் முதலிடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றனர்.

    தேசிய அளவிலான கலை மற்றும் நடனப் போட்டிகள் கடந்த மே மாதம் மஹாராஷ்டிரா புனேயில் பாரதிய சான்ஸ்கிருத சங்கத்தினரால் நடத்தப்பட்டது. இதில் காரைக்குடி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.

    Dubai: karaikudi Nattiyapalli students win the Dance competition

    மகாராஷ்டிராவில் வெற்றி பெற்றவர்கள் நவம்பரில் துபாயில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றனர். இதில் கிராமிய நடனப்போட்டிப் பிரிவில் முத்துமாரி, மைஸ்ரீ, லினசி பிரான்சியா ஆகியோர் முதலிடமும் தங்கப்பதக்கமும் பெற்றனர்.

    ஜூனியர் பரதநாட்டியப் பிரிவில் கீர்த்தனா, சுமித்ரா இரண்டாம் இடமும் சிறுவர் பிரிவில் சாய் ஸ்வாதி, சாய் சாதனா சகோதரிகள் மூன்றாம் இடமும் சீனியர் பிரிவில் பாலாம்பிகா சிறப்புப் பாராட்டு விருதும் பெற்றார். கீ போர்டு வாசிப்பில் லக்ஷ்மித்ரன் கண்களைக் கட்டிக் கொண்டு வாசித்து முதலிடம் பெற்றார்.

    Dubai: karaikudi Nattiyapalli students win the Dance competition

    வெற்றி பெற்றவர்களை கலைக்கோயில் நாட்டியப்பள்ளி முதல்வர் கலைமாமணி முனைவர் மா.சுப.சரளா அவர்கள் பாராட்டினார்.
    இதில் வெற்றிபெற்ற காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகள் மைஸ்ரீ, லின்சி பிரான்சியா, கீர்த்தனா, ஸ்வாதி, சாதனா ஆகியோர் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் பாராட்டுப்பெற்றனர்.

    English summary
    karaikudi Nattiyapalli students won the prize in folk Dance competition in Dubai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X