For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாட்டு அழுத்தம்.. உள்ளுக்குள்ளேயே வெடித்த பெரும் மக்கள் புரட்சி.. கவிழும் நிலையில் ஈரான் அரசு!

Google Oneindia Tamil News

Recommended Video

    உக்ரைன் விமானத்தை தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம்... ஈரான் ஒப்புதல் | Ukranian plane incident

    டெஹ்ரான்: ஈரான் அரசு மக்கள் புரட்சி மற்றும் வெளிநாட்டு அழுத்தத்தால் கவிழ வாய்ப்புள்ளது என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அங்கு தற்போது ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

    ஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டதுதான் என்று ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது. ஈரானை இது பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது. சுலைமானி கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அமெரிக்கா படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    ஆனால் அமெரிக்காவின் மூக்கை உடைக்க நினைத்த ஈரான் தேவையில்லாமல், தன்னுடைய காலை உடைத்துக்கொண்டுள்ளது. இதனால் தற்போது ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

     பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவ தளபதிக்கு தைரியமாக அனுமதி கொடுங்க.. அழிச்சிடுங்க.. சிவசேனா பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவ தளபதிக்கு தைரியமாக அனுமதி கொடுங்க.. அழிச்சிடுங்க.. சிவசேனா

    என்ன போராட்டம்

    என்ன போராட்டம்

    விமான தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஈரான் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் செய்ய தொடங்கியுள்ளனர். ஈரான் தலைமை தலைவர் அலி கமானி, அதிபர் ஹசன் ரவுஹானி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஈரானில் டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த விமான தாக்குதலில் 176 பேர் பலியானார்கள். முக்கியமாக ஈரான் மக்கள்தான் இதில் அதிகம் பலியானார்கள். இதில் 87 ஈரான் மக்கள் பலியானார்கள். 63 கனடா மக்கள் பலியானார்கள். இதுதான் மக்களை போராட்டத்திற்கு தூண்டியுள்ளது.

    முன்பே போராட்டம்

    முன்பே போராட்டம்

    ஈரானின் குவாட்ஸ் படை தளபதி சுலைமானிதான் முன்பு இதுபோன்ற போராட்டங்களை எல்லாம் சமாளித்து வந்தார். ஆனால் அவரும் தற்போது இல்லை. இதனால் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஈரான் அரசு திணறி வருகிறது. சுலைமானி அளவிற்கு அந்நாட்டில் மக்களுக்கு வசீகரமான தலைவர் யாரும் கிடையாது.

    என்ன பொருளாதாரம்

    என்ன பொருளாதாரம்

    அங்கு நாளுக்கு நாள் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது. அதேபோல் அங்கு பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.இ ன்னொரு பக்கம் ஈரான் மீது அமெரிக்கா மூன்றுக்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. இதனால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் எப்படி

    மக்கள் எப்படி

    இதனால் கடந்த ஒரு வருடமாகவே அந்நாட்டு மக்கள் அதிபர் ஹசன் ரவுஹானிக்கு எதிராக போராடி வருகிறார்கள். ஈரான் தங்கள் நாட்டில் எடுக்கும் கச்சா எண்ணெய்யை வெளிநாட்டில் விற்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது . புதிதாக 50 பில்லியன் பேரல் கொண்ட எண்ணெய் கிணறை கண்டுபிடித்துள்ளது. ஆனால் இவ்வளவு எண்ணெய் இருந்தும், தற்போது ஈரானில் பெட்ரோல் டீசல் விலை 300% உயர்ந்து இருக்கிறது. இதுவும் போராட்டத்திற்கு காரணம்.

    இப்போது என்ன

    இப்போது என்ன

    இதோடு சேர்ந்துதான் தற்போது உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர். உள்நாட்டு பிரச்னையை உங்களால் தீர்க்க முடியவில்லை. நீங்கள் ஏன் அமெரிக்காவுடன் சண்டை போடுகிறீர்கள். ஏன் அப்பாவி மக்களை கொல்கிறீர்கள் என்று மக்கள் போராடி வருகிறார்கள்.

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    இன்னோர் பக்கம் கனடா, பிரிட்டன், அமெரிக்கா, உக்ரைன், ஜெர்மனி என்று பல நாடுகள் இந்த உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் ஈரான் மீது கோபத்தில் உள்ளது. ஈரான் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நாடுகள் முறையான திட்டங்களை வகுத்து வருகிறது. விரைவில் இவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் .

    நான்கு பிரச்சனை

    நான்கு பிரச்சனை

    • தற்போது ஈரான் பின் வரும் நான்கு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
    • உக்ரைன் விமான விபத்தால் உலக நாடுகள் கொடுக்கும் அழுத்தம்.
    • செத்து செத்து விளையாட அழைக்கும் அமெரிக்காவின் போர் அழுத்தம்.
    • உக்ரைன் விமான விபத்திற்கு எதிராக உள்நாட்டு மக்களின் போராட்டம்.
    • பொருளாதார சீர்குலைவு காரணமாக உள்நாட்டில் நடக்கும் போராட்டம்.
    அவர் இல்லை

    அவர் இல்லை

    ஈரானின் குவாட்ஸ் படை தளபதி சுலைமாணிதான் முன்பு இதுபோன்ற போராட்டங்களை எல்லாம் சமாளித்து வந்தார். ஆனால் அவரும் தற்போது இல்லை. இதனால் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஈரான் அரசு திணறி வருகிறது. சுலைமாணி அளவிற்கு அந்நாட்டில் மக்களுக்கு வசீகரமான தலைவர் யாரும் கிடையாது.

    அமெரிக்கா திட்டம்

    அமெரிக்கா திட்டம்

    சுலைமானியை கொன்றால் ஈரானில் இப்படி எல்லாம் நடக்கும் என்று அமெரிக்காவிற்கு தெரியும். ஆனால் அமெரிக்கா எதிர்பார்க்காமல், தானாக வந்து கோப்பையில் விழுந்த ஐஸ் கிரீம் ஸ்கூப்தான் உக்ரைன் விமான விபத்து. இதனால் ஈரானில் தற்போது உள்நாட்டு போராட்டம், வெளிநாட்டு அழுத்தம் எல்லாம் ஏற்பட்டுள்ளது.

     அரசு தூக்கி எறியப்படும்

    அரசு தூக்கி எறியப்படும்

    இதை பயன்படுத்தி ஈரான் அரசை தூக்கி எறிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஈரான் இன்னும் ஒரு சிறிய தவறு செய்தால் மொத்தமாக அந்நாட்டு அரசை அமெரிக்கா கவிழ்க்கும். ஆனால் அதற்கு முன்பே ஈரான் அரசு மக்கள் புரட்சி மற்றும் வெளிநாட்டு அழுத்தத்தால் கவிழ வாய்ப்புள்ளது என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    Due to international and inside protest: Iran may see a dissolve in government soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X