For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீட்டிலேயே உச்சா போகும் பயணிகள்.. டாய்லெட் கைப்பிடியில் பாக்டிரியா... விமானங்களின் மறுபக்கம்!

Google Oneindia Tamil News

லண்டன்: விமான பயணம் என்றால் சொகுசு, ஜாலி என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் விமானங்களின் மறுபக்கத்தை சற்று உற்று நோக்கினால் வாந்தி வந்து விடும் உங்களுக்கு. அந்த அளவுக்கு சுகாதாரக் கேடுகள் விமானங்களில் குவிந்து கிடக்கிறதாம்.

விமான பயணத்திற்குப் பிறகு உங்களுக்கு உடல் நலக் கேடு ஏற்படாவிட்டால் ஆச்சரியம்தானாம். அந்த அளவுக்கு பெரும்பாலான விமானங்களில் அசுத்தம் மறைந்து கிடக்கிறது.

விமானத்தின் உட்புறங்களில் பாக்டிரியா தாக்குதல் சர்வசகஜகமாக அனைத்து விமானங்களிலுமே இருக்கிறதாம். உட்காரும் சீட், கை வைக்கும் ஆர்ம்ரெஸ்ட் பகுதி, டிரே, பிளாங்கெட் என எங்கு பார்த்தாலும் அசுத்தமும், சுகாதாரக் கேடும் பாக்டிரியா ரூபத்தில் புதைந்து கிடக்கிறதாம்.

ஜெர்ம்ஸ் இல்லாத இடமே விமானத்தில் இல்லை என்கிறார்கள். வழக்கமாக பாத்ரூமில்தான் இவை அதிகமாக இருக்கும். ஆனால் விமானத்திலேயே பாத்ரூம் மட்டுமல்லாமல் விமானத்தின் பல இடங்களிலும் இவை கொட்டமடிக்கிறதாம்.

குறிப்பாக எட்டு இடங்களில் ஜெர்ம்ஸ், பாக்டிரியா போன்றவை அதிகமாக புழங்குகிறதாம். அவை குறித்த ஒரு பார்வை

டிரே டேபிள்...

டிரே டேபிள்...

வழக்கமாக டிரே டேபிளில் நொறுக்கு் தீனிகளை வைத்து சாப்பிடப் பயன்படுத்துவார்கள். அல்லது புத்தகத்தை வைத்துப் படிப்பார்கள். இந்த டிரே டேபிளில்தான் ஏகப்பட்ட ஈ கோலை உள்ளிட்ட பாக்டிரியா வகையறாக்கள் வாசம் புரிகிறதாம். பலர் தங்களது குழந்தைகளுக்கு நேப்பி மாற்றுவதற்கு இந்த டிரே டேபிளைப் பயன்படுத்துகிறார்களாம்.

தலையணை...

தலையணை...

அடுத்து தலையணை மற்றும் போர்வை போன்றவை. வழக்கமாக இதில் ஏகப்பட்ட அசுத்தம் மறைந்திருக்கும். ரயிலில்தான் இது இருக்கிறது என்றால் விமான பயணங்களிலும் கூட இந்த தலையணை மற்றும் போர்வை ஆகியவை பாதுகாப்பானது அல்லவாம். அந்த நாளின் முதல் விமான பயணத்தின்போதுதான் போர்வை, தலையணை எல்லாம் பிரஷ்ஷாக இருக்குமாம். பிறகு அசுத்தமாகத்தான் இருக்குமாம்.

சீட்பெல்ட், ஆர்ம்ரெஸ்ட்...

சீட்பெல்ட், ஆர்ம்ரெஸ்ட்...

அதேபோல், சீட் பெல்ட், ஆர்ம்ரெஸ்ட் ஆகியவையும் சுகாதார சீர்கேடு மலிந்திருக்கும் இடங்களாம். முடிந்தவரை ஆர்ம் ரெஸ்ட்டில் கை வைக்காமலேயே பயணம் செய்தால் நீங்கள் தப்பலாம். இல்லாவிட்டால் ஆரோக்கிய சீர்கேட்டை வாங்கிக் கொண்டுதான் வர வேண்டும். ஆர்ம் ரெஸ்ட்டில் ஈ கோலை அதிகம் காணப்படுகிறதாம்.

டாய்லெட் கதவுக் கைப்பிடி...

டாய்லெட் கதவுக் கைப்பிடி...

அடுத்து அபாயகரமான இடம் டாய்லெட் கதவின் கைப்பிடியாகும். இதுதான் அதிக அபாயரமானதாம். உள்ளே போய் விட்டு வெளியே வருகிறவர்கள் சரியாக கை கழுவால் வந்து கைப்பிடியைப் பிடிக்கும்போது அதன் மூலம் பாக்டிரியா பரவுகிறது. மேலும் இங்கு கண்ணுக்குத் தெரியாத பல நுண்ணுயிரிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறதாம்.

கார்பெட்...

கார்பெட்...

விமானங்களில் பயன்படுத்தப்படும் கார்பெட், சீட் கவர் போன்றவையும் சுகாதாரமில்லாதவை தானாம். பல நேரங்களில் சிறு குழந்தைகள் சீட்டிலேயே உச்சா போய்விடுதுண்டு. அந்த சீட்களை சரியாக வாஷ் செய்யாவிட்டால் அதன் மூலம் பல பாக்டிரியாக்கள் பரவுகிறதாம்.

சீட் பாக்கெட்...

சீட் பாக்கெட்...

அதேபோல சீட்டில் உள்ள பாக்கெட்களும் ஒறு சிக்கலான அம்சம். அதை பயன்படுத்தாமல் இருப்பதே சாலச் சிறந்தது என்கிறார்கள்.

மேகஸின்...

மேகஸின்...

விமான பயணங்களின்போது தரப்படும் பத்திரிகைகளை கையில் எடுக்காமல் கண்ணோடு பார்த்து விட்டுப் போவது நல்லது என்பது இன்னொரு கருத்து. காரணம், பலர் கை பட்டு அதன் மூலமாக நுண்ணுயிரிகள் அதில் பரவுகிறதாம்.

தண்ணீர்க் குழாய்கள்...

தண்ணீர்க் குழாய்கள்...

அதேபோல விமானத்தில் உள்ள தண்ணீர்க் குழாய்களின் மேலும் நுண்ணுயிரிகள் குவிந்து கிடக்கின்றனவாம். எனவே அதைத் தொடாமல் இருக்க முயற்சித்தால் நல்லது. அப்படித் தொட்டு விட்டால், சரியா முறையில் கையைக் கழுவி விடுவது சிறந்தது.

English summary
Getting ill after flying on a plane can be the worst possible start to a holiday. So when taking your seat on the aircraft, it pays to be clued up as to how we can keep ourselves healthy and avoid contracting illnesses from other passengers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X