For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனித கொழுப்பில் இருந்து காது, மூக்கு தயாரிப்பு... இங்கிலாந்து டாக்டர்கள் சாதனை

Google Oneindia Tamil News

லண்டன்: மனித கொழுப்பிலிருந்து காது, மூக்கு போன்ற உடல் உறுப்புகளைத் தயாரித்து இங்கிலாந்து மருத்துவர்கள் மருத்துவ சாதனைப் புரிந்துள்ளனர்.

பொதுவாக சிலர் பிறவியிலேயே காது, மூக்கு போன்ற உறுப்புகள் இன்றி பிறக்கின்றனர். மேலும் சிலரோ எதிர்பாராத விதமாக விபத்துகளினால் அத்தகைய உறுப்புகளைப் பறி கொடுக்கின்றனர்.

அத்தகைய உறுப்பு குறைபாடுள்ளவர்களுக்கு வரமாக செயற்கையாக மனித கொழுப்பிலிருந்து செயற்கையாக காது, மூக்கு போன்ற உறுப்புகளைத் தயாரித்துள்ளனர் இங்கிலாந்து மருத்துவர்கள்.

முயற்சி திருவினையாக்கும்....

முயற்சி திருவினையாக்கும்....

லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்டிரீட் மருத்துவமனை மற்றும் யூ.சி.எல்.இன்ஸ்டியூட் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டு தற்போது வெற்றி கண்டுள்ளனர்.

சவ்வு செல்களாக மாற்றம்...

சவ்வு செல்களாக மாற்றம்...

பின்னர் அவற்றை காது மற்றும் மூக்கு போன்ற வடிவங்களாக ஆராய்ச்சிக் கூடத்தில் வளர்த்துள்ளனர். பின்னர் அவற்றுடன் சில ரசாயன கலவைகளை சேர்த்து அவற்றை சவ்வு செல்களாக மாற்றியுள்ளனர்.

செயற்கைக் காதுகள்...

செயற்கைக் காதுகள்...

இறுதியாக செயற்கையாக வளர்க்கப்பட்ட சவ்வுப் பகுதியை தோல் பகுதியில் ஒட்டி காதுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மூக்கும் கூட...

மூக்கும் கூட...

இதே முறையில் மூக்குகளும் செயற்கையாக ஆய்வுக்கூடம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.

இன்னும் சில உறுப்புகள்...

இன்னும் சில உறுப்புகள்...

மேலும், இந்த ஆய்வின் மூலம் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி மேலும் பல உறுப்புகள் தயாரிக்க இயலும் என கண்டறியப்பட்டுள்ளதாம்.

English summary
British scientists are aiming to grow ears and noses in a laboratory to transplant then into humans. Scientists from Great Ormond Street Hospital and University College London have managed to use abdominal body fat and turn it into cartilage. It is now hoped that the technique could help patients who have been born with microtia, which means the ear fails to develop properly, or who have been in an accident
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X