For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்பினால் நம்புங்கள்... நிலாவுக்கு பக்கத்தில் ஒளிந்திருக்கும் மேலும் 2 நிலாக்கள்.. !

நிலவுக்கு அருகிலேயே மேலும் இரண்டு நிலவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

புடாபெஸ்ட் : பூமிக்கு ஒரு நிலா மட்டும் அல்ல. அரை நூற்றாண்டுகளாக நிலவி வந்த சர்ச்கைக்கு தற்போது விடை தெரிந்திருக்கிறது. ஹங்கேரி நாட்டின் வானியல் ஆய்வாளர்கள் மற்றும் இயற்பியலாளர்கள் தற்போது, பூமி பந்துக்கு மேலே தூசியினாலான மேலும் இரண்டு நிலாக்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

விண்வெளி தொடர்பான ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. புதிய புதிய கோள்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் நிலவு தனியாக இல்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

[இந்த செய்திகளை வாசிப்பது ஏஐ ரோபோட் 1.0.. சீனாவில் வைரல் ஆகும் நியூஸ் - ரீடர் ரோபோட்! - வீடியோ]

மர்ம மேகக்கூட்டங்கள்:

மர்ம மேகக்கூட்டங்கள்:

இது தொடர்பாக ராயல் வானியல் கழகத்துக்கு அவர்கள் அளித்துள்ள மாதாந்திர அறிக்கையில், ‘பூமியில் இருந்து நிலா இருக்கும் 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தொலைவில், அதே போன்று மர்மான மேகக்கூட்டம் இருப்பதை படம் பிடித்துள்ளதாக'க் கூறியுள்ளனர்.

போலந்து வானியல் ஆய்வாளர்:

போலந்து வானியல் ஆய்வாளர்:

1961 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பூமிக்கு மேலே ஒரு நிலா மட்டுமே இருந்து வந்தாக நம்பப்பட்டது. ஆனால் போலந்து நாட்டின் வானியல் ஆய்வாளர் காசிமிர்ஸ் கோர்திலெவ்ஸ்கி, சொன்ன பிறகு தான் பூமிக்கு மேலே மேலும் சில நிலாக்கள் இருப்பது குறித்து விவாதங்கள் எழுந்தன. இதன் காரணமாகவே அந்த மர்ம மேகக்கூட்டங்களுக்கு கோர்திலெவ்ஸ்கி மேகங்கள் என பெயரிடப்பட்டது.

புரியாத புதிர்:

புரியாத புதிர்:

"இந்த இரண்டு கோர்திலெவ்ஸ்கி மேகங்கள் நிலவை போன்றே பூமிக்கு மிக அருகில் உள்ளன. அதனால் தான் அந்த மேகங்கள் பற்றி நிறைய வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்" என்கிறார் ஹங்கேரி எவோட்வோஸ் லோராண்ட் பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் ஜூதித் ஸ்லிஸ் பாலோக். " ஆனால் நமது பூமிக்கோளில் நிலவை போன்று வேறு ஏதுவும் இருக்கிறதா என்பது புரியாத புதிராக இருக்கிறது ", எனவும் அவர் கூறுகிறார்.

9 மடங்கு பெரிது:

9 மடங்கு பெரிது:

இந்த கோர்திலெவ்ஸ்கி மேகங்களின் அளவு 65000 முதல் 45000 மைல்கள் வரை, அதாவது பூமியைவிட ஒன்பது மடங்கு பெரிதாக இருக்கும் என அளவிடப்பட்டுள்ளது. வளிமண்டத்தில் மறைந்திருக்கும் நிலவைப் போன்ற இந்த மேகக்கூட்டங்கள் ஒரு மாயை என்றே இதுநாள் வரை நம்பப்படுகிறது.

கடினமான ஒன்று:

கடினமான ஒன்று:

"அண்ட ஆகாய ஒளி, நட்சத்திர ஒளி, மேக ஒளி உள்ளிட்டவைகளை கொண்டு இந்த கோர்திலெவ்ஸ்கி மேகக்கூட்டங்கள் கண்டறிவது மிகவும் கடினமான ஒன்று," எனக் கூறினார் ஹங்கேரி எவோட்வோஸ் லோராண்ட் பல்கலைக்கழகத்தின் மற்றொரு வானியல் பேராசிரியரான காபோர் ஹார்வாத். ஆனால் தற்போது சில நவீன கருவிகளை கேமராக்களில் பொருத்தி ஆராய்ந்ததில், அந்த மேகக்கூட்டங்களில் இருந்து சிதறும் ஓளியை பற்றி அறிய முடிந்திருப்பதாகவும் அவர் கூறிகிறார்.

5 விசயங்கள்:

5 விசயங்கள்:

பூமிக்கு மேலே ஒன்றுக்கும் மேற்பட்ட நிலாக்கள் இருப்பதாக நமது வானியல் ஆய்வாளர்கள் பல தலைமுறைகளாக கூறி கூருகின்றனர். இதனை உறுதிபடுத்தும் வகையில் அவர்கள் பல விசயங்களை கூறியிருக்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்து இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வட்டப்பாதை:

வட்டப்பாதை:

பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான புவியிழுப்பு சக்தியின் மையப்புள்ளியில் இந்த கோள்களின் வட்ட பாதை இருக்கிறது. எனவே இந்த பொருட்கள் அங்கே (பூமி மற்றும் நிலவுக்கு இடையே)நிலையாக இருக்கிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதை தான் கோர்திலெவ்ஸ்கி முதலில் அதாவது 1950களில் கண்டறிந்து வெளிப்படுத்தினார் என்கிறார்கள்.

மங்கலான ஒளி:

மங்கலான ஒளி:

தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு நிலவிலும் தூசுகள் நிறைந்து காணப்படுகின்றது என்று ஹங்கேரி நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய இரண்டு நிலவுகளிலும் மங்கலான ஒளியை வீசி வருகின்றது. இதனால் இதை கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் இருந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

English summary
Earth’s moon may not be alone. After more than half a century of speculation and controversy, Hungarian astronomers and physicists say they have finally confirmed the existence of two Earth-orbiting “moons” entirely made of dust.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X