For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புவியில் இருந்து 3000 ஒளிஆண்டுகள் தொலைவில் “இரண்டாம் உலகம்”!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்கா வானியல் ஆராய்ச்சியாளர்கள் நட்சத்திர மண்டலங்களுக்கு இடையில் புவியில் இருந்து 3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்டுபிடித்துள்ள புதிய கிரகமானது வாழ்வாதாரத்தைக் கொண்டு விளங்குவதாக தெரிய வந்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலமாக புவியைப் போலவே அமைப்புடைய வேறு சில கிரகங்களும் அண்டத்தில் இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

மேலும், அவை புவிக்கு மிக அருகிலேயே இருக்கவும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மடங்கு பெரியது:

இரண்டு மடங்கு பெரியது:

புவியை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்ட இந்தக் கிரகமானது இரட்டை நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு நட்சத்திரத்தினை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றது.

புதிய சூரியன் – பூமி:

புதிய சூரியன் – பூமி:

மேலும், அந்த நட்சத்திரத்திற்கும், புதிய கிரகத்திற்கும் உள்ள தொலைவானது கிட்டதட்ட சூரியன் மற்றும் புவிக்கு இடையிலான தொலைவு போன்றே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குளிர்ச்சியான கிரகம்:

குளிர்ச்சியான கிரகம்:

ஆனால், புதிய கிரகம் சுற்றிவரும் நட்சத்திரமானது சூரியனைவிட சிறிதளவு வெம்மை குறைந்தது என்ற காரணத்தினால் இக்கிரகமானது புவியைவிட சற்று குளிர்ச்சியாக இருக்கும்.

உயிர்வாழும் அமைப்பு:

உயிர்வாழும் அமைப்பு:

" புவியை விடக் குளிர்ச்சியான இக்கிரகமானது, சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை புவி அமைந்திருக்கும் நட்சத்திரக் கூட்டத்திலேயே சுற்றி வருவது "உயிர்வாழும் அமைப்பு" அதாவது மக்கள் உயிர்வாழ்வதற்கான காரணிகளைக் கொண்ட இடமாகக் கருதப்படுகின்றது" என்று ஓகியோ மாகாண பல்கலைக்கழக வானியல் துறை பேராசிரியர் ஸ்காட் காவ்டி கூறியுள்ளார்.

பிரகாசமான வருங்காலம்:

பிரகாசமான வருங்காலம்:

இந்த கண்டுபிடிப்பானது வருங்காலத்தில் மேலும் உயிர்வாழத் தகுதியான இடங்களைக் கண்டறிய ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடரும் ஆராய்ச்சி:

தொடரும் ஆராய்ச்சி:

" அண்டத்தில் இதுபோன்று இரட்டை நட்சத்திர அமைப்பில் முக்கால்வாசி நட்சத்திரங்கள் அமைந்துள்ளன. இதுபோன்ற கிரகங்கள் இன்னும் இருக்குமா என்பதைப் பற்றிய வேறு தகவல்கள் ஏதும் இல்லை" என்று மேலும் கூறியுள்ளார்.

ஓக்ளி கிரகம்:

ஓக்ளி கிரகம்:

கண்டறியப்பட்டுள்ள இப்புதிய கிரகமானது ஓக்ளி-2013 என்று அழைக்கப்படுகின்றது. முதலில் சிறிதளவாக ஓக்ளி எனப்படும் டெலஸ்கோப் மூலம் கண்டறியப்பட்டுள்ளதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புவியைப் போன்ற அமைப்பு:

புவியைப் போன்ற அமைப்பு:

இதனுடைய முழுமையான ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த கிரகமானது புவியைப் போன்றே, 90 மில்லியம் மைல்கள் தொலைவில் நட்சத்திடம் ஒன்றை சுற்றி வருகின்றது தெளிவாகியது.

கண்டுபிடிப்பு சாத்தியம்:

கண்டுபிடிப்பு சாத்தியம்:

இதன்மூலமாக சரியான வெப்பநிலையுடன் உயிர்வாழத்தகுதிவாய்ந்த மேலும் கிரகங்கள் கண்டறியப்படலாம் என்று ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரோ தெரிவித்துள்ளார்.

English summary
Astronomers have discovered a new planet in a binary star system located 3,000 light-years from the Earth that may help them find planets harbouring life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X