For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு!

தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

லிமா: தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலைதான் மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. அதன்பின் மேற்கு வங்கத்தில் உள்ள பன்குரா மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. பன்குரா மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Earth Quake attacks West Bengal, Peru and Andaman one by one

இதனால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இதை தொடர்ந்து மச்சு பிச்சுவும் அமேசான் காடுகளும் சூழ்ந்து இருக்கும் தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகி உள்ளது.

வடக்கு பெருவில் மோயாம்பா நகரில் இருந்து 180 கிமீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 109.09 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஆனால் இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த முழு விபரம் இன்னும் வெளியாகவில்லை. இதை தொடர்ந்து கொலம்பியா, ஈகுவேடார் ஆகிய நாடுகளிலும் நிலை நடுக்கம் ஏற்பட்டது. அதே சமயம் இதனால் எங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. வரிசையாக ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Earth Quake attacks West Bengal, Peru and Andaman one by one. People in Colombia and Ecuador reported feeling the quake as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X