For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையில்லை

கிழக்கு இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

அம்பான்: இந்தோனேசியாவில் உள்ள அம்பான் என்ற தீவின் அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது.

Earthquake of 6.1 magnitude hits eastern Indonesia

இதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்றும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் இன்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுக்கோலில் 6.1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், சேரம் கடல் பகுதியை ஒட்டியுள்ள மலுக்கு மாகாணத்தின் தலைநகரான அம்பான் நகரின் வடகிழக்கே சுமார் 119 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 11.9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக நேரிட்ட சேத விவகாரம் தொடர்பான தகவலும் வெளியாகவில்லை.

இந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. இதனால் மக்கள் பீதியுடன் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எந்த தகவல் வெளியாகவில்லை.

பூகம்ப ஆபத்து பகுதியில் இந்தோனேசியா உள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு சுமத்ரா தீவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சுனாமி தாக்கியது. கடந்த 2013 ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் பலியாகினர் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
6.0 magnitude earthquake 196 km from Ambon, Maluku, Indonesia.US seismologists said, but no tsunami warning was immediately issued.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X