For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பசிபிக் பெருங்கடலில் 7.0 ரிக்டர் நிலநடுக்கம்... மகாராஷ்ட்ராவில் 4.3!

By Shankar
Google Oneindia Tamil News

நிகாரகுவா: பசிஃபிக் பெருங்கடலில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக மத்திய அமெரிக்க நாடுகளான நிகாரகுவா, எல் சால்வடார் உள்ளிட்ட நாடுகளில் கட்டடங்கள் அதிர்ந்தன.

இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Earthquake in Central America

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

நிகாராகுவாவில் இந்த நிலநடுக்கத்துக்கு ஒரு மணிநேரம் முன்புதான் சக்திவாய்ந்த 'Otto' சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றது. இதனால், அந்நாட்டின் அதிபர் டேனியல் ஒர்டேகா தேசிய அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார்.

மகாராஷ்ட்ராவில்..

மகாராஷ்ட்ராவின் கொய்னா நகரிலும் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.3 ஆக இருந்தது. ஆனால் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

இன்று ரஷ்யா, தைவான் நாடுகளிலும் 5.5, 5.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உணரப்பட்டது.

English summary
A 7.0 magnitude earthquake has shaken El Salvador and Nicaragua, just an hour after a powerful hurricane hit Nicaragua's eastern coast. Koyna, one of the towns in Maharashtra also felt tremour at 4.3 magnitude
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X