For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 5.1 ஆக பதிவு 2 பேர் பலி; 22 பேர் படுகாயம்

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ஈரானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2 பேர் பலியாகி உள்ளனர். 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வடக்கு ஈரான் பகுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

Earthquake hits Iran - 2 died; 22 injured

ரிக்டரில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தின் போது அச்சத்தால் 21 வயது இளம் பெண் ஒருவரும் 60 வயது முதியவர் ஒருவரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டெஹ்ரானின் வடகிழக்குப் பக்தியான டமாவாந்த்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் அடித்தளம் மிகவும் பயங்கரமாக குலுங்கியதாக டெஹ்ரான்வாசிகள் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

வசூலெல்லாம் சூப்பர்தான்.. டாஸ்மாக் திறந்த முதல் நாளே.. பல வன்முறைகள்.. கொலை, தீக்குளிப்பு, விபத்து!வசூலெல்லாம் சூப்பர்தான்.. டாஸ்மாக் திறந்த முதல் நாளே.. பல வன்முறைகள்.. கொலை, தீக்குளிப்பு, விபத்து!

மேலும் நிலநடுக்கம் தொடர்பான வீடியோ, படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். நிலநடுக்கத்துக்குப் பின்னரும் அதிர்வுகள் உணரப்பட்டன.

வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்திருக்கும் பொதுமக்கள் அங்கும் உரிய தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஈரானில் கொரோனா பாதிப்பால் 6,500 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Two people have died and 22 were in following a 5.1 earthquake hit Iran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X