For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக்- ஈரான் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்... இந்தியர்களின் நிலை என்ன?

ஈராக்- ஈரான் எல்லையில் நேற்று இரவு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனினும் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்பது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஈராக்- ஈரான் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்- வீடியோ

    ஹலாப்ஜா: ஈராக்- ஈரான் எல்லையில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் அங்கு பணி நிமித்தமாக உள்ள இந்தியர்களின் நிலை குறித்து தகவல்கள் ஏதும் இல்லை.

    ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 350 கி.மீ. தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது.

    இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஏராளமான பொருள்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

    மீட்பு பணிகள்

    இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 135 பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணிகள் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    குண்டுவைத்தது போன்ற சப்தம்

    நிலநடுக்கத்தையொட்டி நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடித்தது போன்ற இந்த நிலநடுக்கத்தின் விளைவுகள் ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

     நிலை என்ன?

    நிலை என்ன?

    ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களிலும் பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர். எல்லையில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு இந்தியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

     இந்தியர்கள் சேஃப்

    இந்தியர்கள் சேஃப்

    துருக்கி, சிரியா, குவைத், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரம், ஆர்மேனியா, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஈராக்- ஈரான் நிலநடுக்கத்தைத் தவிர்த்து ஏனைய இடங்களில் வசித்து வரும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English summary
    The tremors are attributed to a magnitude 7.2 earthquake that was recorded along the Iran and Iraq border. There will no reports about the Indians.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X