For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈக்வடார் நிலநடுக்கம்... பலி எண்ணிக்கை 350ஆக உயர்வு... தொடரும் நில அதிர்வால் மக்கள் பீதி

Google Oneindia Tamil News

க்விட்டோ: ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350ஆக உயர்ந்துள்ளது.

ஈக்வடாரின் க்விட்டோ நகரில் இருந்து 173 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கே உள்ள இடத்தை மையமாகக் கொண்டு 10 கிலோமீட்டர் ஆழத்தில் சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

Ecuador Earthquake Kills Hundreds

ஈக்வடாரில் சனிக்கிழமை இரவு 11.58 மணிக்கு இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது நடுக்கம் 7.8 ஆகவும் பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 300 கிலோமீட்டருக்குள் உள்ள பகுதியில் பயங்கர சுனாமி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கம் காரணமாக இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஈக்வடார் அதிபர் ரபேல் கோரியா தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 130க்கும் அதிகமான முறை நில அதிர்வு உணரப் பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் வீடுகளுக்கு திரும்பாமல் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சாலைகளில் தங்கி வருகின்றனர்.

English summary
At least 350 people were killed and 2,527 injured, mostly in the northwestern coastal area of Manabí, the government said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X