For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஹ்ரைனில் ஜூலை 1ம் தேதி கல்வி ஆலோசனை நிகழ்ச்சி

Google Oneindia Tamil News

மனாமா: பஹ்ரைனில் உள்ள திருவள்ளுவர் சமூக, கலாச்சாரக் கழகமும், சாய்ஸ் அட்வர்டைசிங் நிறுவனமும் இணைந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பு 2 நாள் ஆலோசனை முகாமை நடத்தவுள்ளன.

இந்த முகாமை பிரபல கல்வி ஆலோசகரும், ஆய்வாளருமான ஜெயப்பிரகாஷ் காந்தி நடத்துகிறார். இங்கு உயர் கல்வி குறித்த பல்வேறு ஆலோசனைகள் பெற்றோர்களுக்கும், மணவர்களுக்கும் வழங்கப்படும்.

Educatioal& Career Councelling Program in Bahrain

மேலும் பஹ்ரைனில் பத்து மற்றும் 12வது கிரேட் முடித்து அதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்து பரிசளிக்கப்படும். 2வது ஆண்டாக இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சாரக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜூன் 30ம் தேதி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இந்த முகாம் தொடங்குகிறது. மனாமாவில் உள்ள இந்தியன் கிளப்பில் இது நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணம் கிடையாது. அனுமதி இலவசம்.

அதன் தொடர்ச்சியாக ஜூலை 1ம் தேதி ஜெயப்பிரகாஷ் காந்தி நடத்தும் கருத்தரங்கமும், ஆலோசனைக் கூட்டமும் இதில் இடம் பெறும். ஹூரா, அஷ்ரப் ஹாலில் காலை 10.30 மணிக்கு இது தொடங்கும்.

இதில் முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இது தொடர்பாக பதிவு செய்து கொள்ள அணுக வேண்டிய தொலைபேசி எண்களும், நபர்களும் பின்வருமாறு: விஜி முரளி 39868307, பாலாஜி 37304477.

பஹ்ரனில் உள்ள தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் உதவும் வகையில் இந்த கழகம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு சமூக நல சேவைகளிலும் இது ஈடுபட்டு வருகிறது. ரத்ததான முகாம்கள், வேலைவாய்ப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றை திருவள்ளுவர் சமூக கலாச்சாரக் கழகம் நடத்தி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு: தேசிகன் சுரேஷ், 39068323

English summary
Tiruvalluvar Social and Cultural Association (Tisca) in association presents “ TOWARDS THE PEAK WITH CONFIDENCE” – an educational and career counseling program by renowned Career Consultant & Analyst Mr. Jayaprakash Gandhi in Bahrain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X