For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நார்வே தலைநகர் ஆஸ்லோவின் துணை மேயராக ஈழத் தமிழ்ப் பெண் கம்சாயினி குணரட்ணம் தேர்வு

By Mathi
Google Oneindia Tamil News

ஆஸ்லோ: நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவின் துணை மேயராக 27 வயது ஈழத் தமிழ்ப் பெண் கம்சாயினி குணரட்ணம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நார்வேயில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சியின் ஒஸ்லோ மாநகர கிளை துணைத் தலைவர் மற்றும் இளைஞர் பிரிவு தலைவராக இருக்கும் கம்சாயினி குணரட்னமும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Eelam Tamil elected new deputy mayor of Oslo

கடந்த 2011ஆம் ஆண்டு நார்வே தொழிலாளர் கட்சியின் இளைஞர் மாநாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 72 பேர் பலியாகினர். இத்தாக்குதலில் உயிர் தப்பியவர் கம்சாயினி குணரட்னம்.

இலங்கையில் பிறந்த இவர் 3 வயதில் பெற்றோருடன் நார்வேக்கு அகதியாக வந்தவர். தற்போது 27 வயதில் தலைநர் ஒஸ்லோவின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

English summary
A Eelam Tamil 27-year-old is to become the new deputy mayor of Oslo as Norway's Labour Party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X