For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

235 பேரை கொல்ல பயன்பட்ட வாகனங்கள் தாக்கி அழிப்பு.. எகிப்து போர் விமானங்கள் அதிரடி!

எகிப்தின் விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை தடம் தெரியாமல் அழித்தன.

Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்தில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 235 பேர் கொல்லப்பட்டனர். எகிப்தின் விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை தடம் தெரியாமல் அழித்தன.

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் நகரில் வெள்ளி கிழமையான நேற்று மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நவீன ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென தீவிரவாதிகள் மசூதிக்குள் நுழைந்தனர்.

மேலும் மசூதியில் வெடிகுண்டுகளை வீசியும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன்பின்னர் தீவிரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

235 பேர் பலி

இந்த கொடூர சம்பவத்தில் 235 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழைத்தனமான தாக்குதல்

கோழைத்தனமான தாக்குதல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ஒன்றுமறியாத மற்றும் தற்காத்து கொள்ள முடியாத நிலையில் இருந்தவர்கள் மீது நடந்த மிக கொடிய மற்றும் கோழைத்தனம் நிறைந்த தீவிரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளார்.

போர் விமானங்கள் தாக்குதல்

இந்த நிலையில், எகிப்தின் விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை தடம் தெரியாமல் அழித்தன.

ஆயுதங்கள் அழிப்பு

மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதிகளை இலக்காக கொண்டும் எகிப்து போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் தீவிரவாதிகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அழிக்கப்பட்டதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Egyptian air force on Saturday gunned down several militants and destroyed their vehicles, hours after over 230 worshippers were killed in a terrorist attack at a mosque in the country’s restive North Sinai region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X