For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை

By Karthikeyan
Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்தில் அரசு ரகசியங்களை கத்தார் நாட்டிற்கு தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் வழக்கில் முன்னாள் அதிபர் மோர்சிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி. முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைக் கைப்பற்றிய மோர்சியால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை.

Egypt Former President Morsi sentenced to 40 years in prison

எகிப்தின் ராணுவத் தலைவராக இருந்த அப்டெல் சிசி, மோர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையிலும் அடைத்தார். அவர்மீது பல வழக்குகள் தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

2011-ம் ஆண்டு, ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான கிளர்ச்சியின்போது ஜெயில் உடைப்பில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வக்கில் மோர்சிக்கும் அவருக்குத் துணை புரிந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் முக்கிய தலைவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வேவு பார்த்து அரசின் ரகசியங்களை கத்தார் நாட்டிற்கு தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மோர்சி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு ஆயுள் தண்டனை (25 ஆண்டு சிறைவாசம்) விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். வேவு பார்த்த வழக்கில் கூடுதலாக 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன்மூலம் அவர் மொத்தம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இதே வழக்கில் மரண தண்டனை பெற்ற முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் 6 பேரின் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது. மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை (25 ஆண்டுகள் சிறைவாசம்) விதிக்கப்பட்டுள்ளது.

English summary
Egypt’s toppled Islamist President Mohamed Morsi was on Saturday sentenced to life imprisonment by a court for passing state secrets to Qatar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X