For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போதை பழக்கத்தை மறைக்க மனைவி சிறுநீரை மாற்றி கொடுத்த டிரைவர்... காட்டி கொடுத்த ‘கர்ப்பம்’!

Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்தில் போதைப் பழக்கத்தை மறைக்க சோதனைக்கு மனைவியின் சிறுநீரை மாற்றிக் கொடுத்துள்ளார் டிரைவர் ஒருவர். சோதனையின் முடிவில் கர்ப்பம் என வந்ததால் டிரைவர் செய்த தில்லுமுல்லு அம்பலமாகியுள்ளது.

திருடனுக்கு தேள் கொட்டினாற் போல என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போல எகிப்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

எகிப்தில் விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் பஸ் டிரைவர்களுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக, அனைத்து டிரைவர்களும் அரசு மருத்துவமனைகளில் தங்கள் சிறுநீரை பரிசோதனைக்காக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பஸ் டிரைவர்கள் அனைவரும் தங்களது சிறுநீரை பரிசோதனைக்கு வழங்கி வருகின்றனர்.

ஆனால், ஒரு டிரைவர் மட்டும் தனது போதைப் பழக்கத்தை மறைக்க தனது மனைவியின் சிறுநீரை சோதனைக்கு மாற்றிக் கொடுத்துள்ளார். அந்த டிரைவரின் சிறுநீரை பரிசோதனை செய்த ஆய்வக ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அதில் கர்ப்பம் என வந்துள்ளது. எனவே, அதனையே அவர் மருத்துவ அறிக்கையிலும் குறிப்பிட்டு விட்டார்.

பின்னர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பஸ் டிரைவரை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனபோதும், மனைவியின் சிறுநீரை சோதனைக்கு மாற்றி அனுப்பியதை டிரைவர் ஒப்புக் கொள்ளாமல் அது தன்னுடையது தான் என அவர்களிடம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

உடனே, விசாரணை நடத்திய அதிகாரி சிரிப்புடன் ‘நீங்கள் கர்ப்பம் அடைந்திருப்பதற்கு எனது வாழ்த்துக்கள்' எனக் கூறி அந்த டிரைவரின் கையைக் குலுக்கி அனுப்பி வைத்துள்ளார்.

English summary
An Egyptian bus driver who tried to avoid a drugs test by using his wife's urine has been busted after it turned out his wife was pregnant, it's reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X