For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கழுதைக்கு ‘ராணுவத்தளபதி’ சிசி பெயர் சூட்டிய எகிப்து விவசாயி கைது

Google Oneindia Tamil News

கெய்ரோ: ராணுவத் தளபதியின் பெயரை தனது கழுதைக்கு வைத்ததோடு, அதற்கு ஒரு தொப்பியும் அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற விவசாயி ஒருவர் எகிப்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி எகிப்தில் நடைபெற்ற ராணுவப் புரட்சியைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் முகமது மோர்சி பதவி இறக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ராணுவத் தளபதி அப்டெல் ஃபட்டா அல் சிசி தற்போதைய அரசின் துணைப் பிரதமராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், ராணுவத் தலைமைப் பதவியையும் ஒருசேர வகித்து வருகின்றார்.

இதன் எதிரொலியாக மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து சச்சரவுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. எகிப்து நாட்டின் பெரும்பான்மையான மக்களிடையே பிரபலமாக இருக்கும் சிசியின் ஓவியங்கள் அங்குள்ள கடைகளிலும், புகைப்படங்கள் மக்களின் வாகனங்களிலும், சுவரொட்டிகளிலுமாக நாடு முழுவதும் காணப்படுகின்றது.

இந்நிலையில், எகிப்தின் மத்தியப் பகுதியில் உள்ள குயினா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஒமர் அபு அல் மகத் அலி அல் சகிர்(31) என்ற விவசாயி. இவர் தான் வளர்க்கும் கழுதைக்கு அந்நாட்டு ராணுவத் தளபதியின் பெயரை வைத்துள்ளாராம்.

அத்தோடு, நேற்று ஓமர் அந்தக் கழுதைக்கு ஒரு தொப்பியையும் அணிவித்து அவர்கள் கிராமத்தின் வழியே ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார். இது நேரடியாக ராணுவத் தளபதியை அவமதிப்பதாகக் கருதப்பட்டதால், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

English summary
An Egyptian farmer has been arrested for putting the name of the country's military chief General Abdel Fattah al-Sisi and an army cap on his donkey, state media said on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X