For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓ காட்.. இங்கே இருந்த ஈபிள் டவரை எங்கப்பா காணோம்.. பனிப்பொழிவில் சிக்கி நடுங்கும் பாரீஸ்!

பாரிஸில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால் ஈஃபிள் டவர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பனிபொழிவினால் மூடப்பட்ட உலக அதிசயமான ஈபிள் டவர்- வீடியோ

    பாரிஸ்: கடுமையான பனிப்பொழிவால் உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் டவர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    உலகின் பலப்பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அண்மையில் அமெரிக்காவில் கொட்டித்தீர்த்த பனி மற்றும் குளிரால் உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான நயகரா நீர் வீழ்ச்சி உறைந்து போனது.

    இதேபோல் சீனாவிலும் நிலவிய கடும் பனிப்பொழிவால் அங்கிருந்த நீர்நிலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உறைந்து போயிருந்தது. சுவிட்சர்லாந்திலும் இந்த ஆண்டு வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது.

    பாரிஸ் நகரை போர்த்திய பனி

    பாரிஸ் நகரை போர்த்திய பனி

    இந்நிலையில் பிரான்ஸிலும் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரில் வெண்பட்டால் போர்த்தப்பட்டுள்ளது போல் உள்ளது.

    6 இன்ச் வரை பனிப்பொழிவு

    6 இன்ச் வரை பனிப்பொழிவு

    பாரிஸில் கடந்த 31 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 6 இன்ச் வரை கொட்டும் பனியால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    700கி.மீ ட்ராஃபிக் ஜாம்

    700கி.மீ ட்ராஃபிக் ஜாம்

    கடுமையான பனிப்பொழிவால் பாரிஸ் நகரில் 700 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பாரிஸ் நகரில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

    ஈஃபிள் டவர் மூடல்

    ஈஃபிள் டவர் மூடல்

    பனிப்பொழிவு காரணமாக பாரிஸ் நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் டவர் நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    எமர்ஜென்சி ஷெல்டர்ஸ்

    எமர்ஜென்சி ஷெல்டர்ஸ்

    பனியோடு கடுமையான குளிரும் நிலவி வருவதால் வீடில்லாமல் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு எமர்ஜென்சி குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. 46 எமர்ஜென்சி ஷெல்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    கொண்டாடும் மக்கள்

    கொண்டாடும் மக்கள்

    2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குவிக்கப்பட்டு சாலையோரம் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இந்த கடுமையான பனிப்பொழிவையும் பாரிஸ் மக்கள் சிலர் தைரியமாக உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

    பலாய்ஸ் ராயல் கார்டன்

    பலாய்ஸ் ராயல் கார்டன்

    அவர்கள் ஸ்னோபோர்டு உள்ளிட்ட விளையாட்டுக்களை குவிந்து கிடக்கும் பனியில் விளையாடி வருகின்றனர். பலாய்ஸ் ராயல் கார்டன் பகுதியை மூடியுள்ள வெண் பனியில் குழந்தைகள் இளைஞர்கள் என பலரும் ஒருவர் மீது ஒருவர் பனியை வீசி விளையாடி வருகின்றனர்.

    English summary
    Eiffel Tower closed due to heavy snowfall blankets Paris. Roadways across Paris, with a record 700km of traffic jams recorded on Tuesday evening.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X