For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் திடீர் மூடல்.. காரணத்த கேட்டா டென்ஷன் ஆயிடுவீங்க!

Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் இளைஞர் ஒருவர் ஏறியதால் திடீரென மூடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் உள்ளது. பாரீஸ் நகரின் அடையாளமாக கருதப்படும் இந்த டவரை உலகின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த டவர் இளைஞர் ஒருவர் ஏறியதால் நேற்று திடீரென மூடப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

மோசடிகளே மூலதனம்... இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே டிடிவி தினகரன் மோசடிகளே மூலதனம்... இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே டிடிவி தினகரன்

1000 அடியை தொட

1000 அடியை தொட

இந்த டவரில் நேற்று இளைஞர் ஒருவர் வேகமாக ஏறிவிட்டார். 1000 அடியை தொட்டுவிட வேண்டும் படுவேகமாக தாவி தாவி ஏறிய இளைஞர் சிறிது நேரத்திலேயே 500 அடி உயரத்தை எட்டிவிட்டார்.

சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

இதனைக்கண்ட மற்ற சுற்றுலாப்பயணிகள் அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டவர் பகுதிக்கு வந்த போலீசார், சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றிவிட்டு இளைஞரை கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஈஃபில் டவர் மூடல்

ஈஃபில் டவர் மூடல்

இதனால் அப்பகுதியில் பெரும் கூட்டம் சேர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பதற்றத்தை தணிக்கும் வகையில் ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இன்று திறக்கப்படும்

இன்று திறக்கப்படும்

இதையடுத்து 6 மணி நேரம் போராடி அந்த இளைஞரை போலீசார் மீட்டனர். எதற்காக ஈஃபில் டவர் மீது அவர் ஏறினார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து டவர் மீண்டும் இன்று காலை, 9.30 மணி அளவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

English summary
Eiffel Tower has been closed temporarily after a man climbed on the tower.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X