For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 நாய்களை வரிசையாக நிற்க வைத்து... அட இப்டியெல்லாம் கூடவா கின்னஸ் சாதனை படைக்கலாம்!

நாய்களுக்கு கோங்கா நடனமாட பயிற்சி அளித்து, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமி.

Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தனது நாய்களை கோங்கா நடனமாட வைத்து சாதனை படைத்துள்ளார்.

மனிதர்கள் படைக்கும் சாதனைகளும், இயற்கையின் அதிசயங்களும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்படுகின்றன. எனவே சாதனை படைக்கத் துடிக்கும் பலர் தங்களுடைய பெயரை எப்படியாவது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்துவிட வேண்டும் என தீவிரமாக முயற்சித்து வரும் செய்திகளை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமி அலெக்சா லான்பர்கருக்கு உலக சாதனை படைக்க அத்தனை சிரமங்கள் தேவைப்படவில்லை. தனது செல்ல நாய்களை வைத்தே கின்னஸ் சாதனை படைத்துவிட்டார். ஆனால் அதுவும் அத்தனை சுலபமானது அல்ல.

தனி ரூம் வேணும்.. தொற்று தொத்திக்கும்.. ரவுடி பேபி சூர்யாவின் அக்கப்போர்.. டெஸ்ட் எடுத்தாச்சு!தனி ரூம் வேணும்.. தொற்று தொத்திக்கும்.. ரவுடி பேபி சூர்யாவின் அக்கப்போர்.. டெஸ்ட் எடுத்தாச்சு!

ஜெர்மன் சிறுமி

ஜெர்மன் சிறுமி

அலெக்சா நாய்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். எனவே தனது வீட்டில் விதவிதமான நாய்களை வளர்த்து வருகிறார். அவைகளுக்கு பயிற்சி கொடுப்பதே அலெக்சாவின் முக்கிய பணியாகும்.

கோங்கா நடனம்

கோங்கா நடனம்

ஒருவர் பின் ஒருவர் தோளில் கை வைத்தப்படி வரிசையாக நின்றுகொண்டு ஆடும் லத்தின் அமெரிக்க நடனத்துக்கு பெயர் கோங்கா. கிட்டத்தட்ட சிறு வயதில் விளையாடும் ரயில் விளையாட்டை ஒத்தது தான் இந்த நடனம். இந்த கோங்கா நடனத்தை தான் தனது நாய்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார் அலெக்சா.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

அலெக்சா சொல்வதை அப்படியே கேட்டு நடக்கும் எட்டு நாய்கள், முன்காலை தூக்கி வைத்துக்கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நடந்து சென்று கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கின்றன. கின்னஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் முன்னிலையில் நிகழ்ந்த இந்த சாதனையின் போது, எட்டு நாய்களும் சுமார் 5 மீட்டர் தூரத்தில் கோங்கா வரிசையில் நடந்து அசத்திவிட்டன.

வைரலான வீடியோ

வைரலான வீடியோ

நாய்களின் இந்த அட்டகாசமான செயலை பார்த்து வியந்துபோன கின்னஸ் அமைப்பினர், சிறுமி அலெக்சாவை பாராட்டித் தள்ளிவிட்டனர். மேலும் தங்களுடைய முகநூல் பக்கத்தில் நாய்களின் கோங்கா நடன வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு பகிர்ந்தது. இதையடுத்து வைரலான அந்த வீடியோவை பேஸ்புக்கில் மட்டும் 14 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

அலெக்சாவின் சாதனைகள்

அலெக்சாவின் சாதனைகள்

சிறுமி அலெக்சா ஏற்கனவே பல சாதனைகளை படைத்தவர். ஜெர்மனியில் மிக பிரபலமான ஜெர்மன் டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் அலெக்சா. அதேபோல் அமெரிக்கா காட் டேலண்ட் எனும் உலகளவில் பிரபலமான நிகழ்ச்சியிலும் அலெக்சா அசத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 12-year-old dog trainer from Germany has earned a Guinness World Record for teaching her dogs how to do the conga.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X