For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட்டுரிமை சரி.. சவூதி பெண்கள் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கே!

Google Oneindia Tamil News

ரியாத்: சவூதி அரேபியப் பெண்கள் இன்று முதல் முறையாக தேர்தலில் வாக்களித்து புதிய வரலாறு படைத்துள்ளனர். ஆனால் சர்வதேச பெண்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் இன்னும் மிக மிக பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர்.

மற்ற நாட்டுப் பெண்களைப் போல சவூதி அரேபியப் பெண்களால் சுதந்திரமாக இருக்க முடியாது. ஒரு தடையிலிருந்துதான் அவர்கள் மீண்டு வந்துள்ளனர். ஆனால் அவர்களைச் சுற்றி இன்னும் ஏகப்பட்ட தடை வளையங்கள் இறுக்கமாக வளைத்துப் பிடித்துள்ளன.

சவூதி பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மற்ற தடைகள் என்னென்ன தெரியுமா...? வாருங்கள் பார்க்கலாம்.

தனியாக வெளியில் போகக் கூடாது

தனியாக வெளியில் போகக் கூடாது

சவூதியில் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது தனியாகப் போகக் கூடாது. ஆண் துணையுடன்தான் போக வேண்டும். அந்த ஆண் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது உறவினராக இருக்க வேண்டும். எங்கு போனாலும் கூட குடும்பத்தைச் சேர்ந்த ஆண் துணை இல்லாமல் வெளியில் வர முடியாது.

கார் ஓட்டக் கூடாது

கார் ஓட்டக் கூடாது

சவூதியில் பெண்களுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதி கிடையாது. இதை உடைக்க நீண்ட காலமாக பெண்கள் முயன்று வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டு கூட கார் ஓட்டும் போராட்டத்தில் பெண்கள் அமைப்பினர் ஈடுபட்டனர். ஆனால் அது வெற்றி பெறவில்லை.

ஆடைக் கட்டுப்பாடு

ஆடைக் கட்டுப்பாடு

பெண்கள் தங்களது அழகு தெரியும் வகையில் உடலை வெளிக்காட்டும் வகையிலான உடைகளையோ அல்லது மேக்கப் போட்டோ வெளியில் நடமாடக் கூடாது. கண்கள் மட்டுமே வெளியில் தெரியும் வகையில் வெளியில் வரும்போது உடை அணிய வேண்டும் என்பது அங்குள்ள கட்டுப்பாடு ஆகும். அங்குள்ள டிவி பெண் ஊழியர்களுக்கும் கூட இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகம் இல்லாத ஆண்களுடன் பேசக் கூடாது

அறிமுகம் இல்லாத ஆண்களுடன் பேசக் கூடாது

பெண்கள் தங்களது குடும்பத்தைச் சேராத, உறவு முறை இல்லாத, அறிமுகம் இல்லாத ஆண்களுடன் பேசக் கூடாது. பழகக் கூடாது. சவூதியில் உள்ள பொது இடங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடத்திலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனி நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருக்கும். அரசு போக்குவரத்து வாகனங்கள், பூங்காக்கள், கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும் தனித் தனி இடங்கள் உண்டு.

நீச்சலுக்குத் தடை

நீச்சலுக்குத் தடை

பெண்களுக்கு பொது நீச்சல் குளத்தில் நீச்சலடிக்க அனுமதிகிடையாது. ஜிம்முக்குப் போகக் கூடாது. நீச்சல் குளம் பக்கம் கூட அவர்களால் போக முடியாது.

விளையாட முடியாது

விளையாட முடியாது

சவூதி அரேபியாவில் விளையாட்டில் பெண்கள் பங்கேற்கவும் அங்குள்ள மத குருமார்கள் அனுமதிப்பதில்லை. இதையும் மீறி லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு முதல் முறையாக பெண்கள் அணியை அந்த நாட்டு அரசு அனுமதித்தபோது அந்த அணியில் இடம் பெற்ற வீராங்கனைகளை விபச்சாரிகள் என்று அங்குள்ள மத குருமார்கள் கடுமையாக விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் கண்டிப்பான உடைக் கட்டுப்பாட்டுடன் அந்த வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர்.

வங்கிக் கணக்கை தொடங்க முடியாது

வங்கிக் கணக்கை தொடங்க முடியாது

சவூதி பெண்கள் தங்களது இஷ்டத்திற்கு வங்கிகளில் கணக்கு தொடங்க முடியாது. திருமணமான பெண் என்றால் கணவரின் அனுமதியுடன்தான் தொடங்க முடியும். அதேபோல திருமணமாகாத பெண் என்றால் வீட்டில் தந்தை அல்லது சகோதரர்களின் அனுமதியுடன்தான் தொடங்க முடியும்.

சமாதிகளுக்குப் போகக் கூடாது

சமாதிகளுக்குப் போகக் கூடாது

இதுதவிர சமாதிகளுக்குப் போகக் கூடாது, பேஷன் புத்தகங்களை தணிக்கை செய்யாமல் படிக்கக் கூடாது, பார்பி பொம்மைகளை வாங்கக் கூடாது என்பது உள்பட மேலும் பல தடைகளும் சவூதி பெண்களுக்கு உண்டு.

ஆனால் சவூதி பெண்கள் இந்தத் தளைகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அந்த நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

English summary
For the first time in history, women in Saudi Arabia will be allowed to vote and stand in municipal election this week. But still they have many bans, here are some.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X