For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட போங்கய்யா நீங்க வேற.. டிவிட்டரை விட்டு "எஜக்ட்" ஆன எலான் மஸ்க்!

Google Oneindia Tamil News

சான் பிரான்சிஸ்கோ: டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், டிவிட்டரை விட்டு டிஸ்கனெக்ட் ஆவதாக கூறி விட்டு போய் விட்டார்.

டெஸ்லாவின் தலைவரான எலான் மஸ்க் ஏன் டிவிட்டர் மீது இத்தனை கோபம் கொண்டுள்ளார் என்று தெரியவில்லை. அடுத்தடுத்து 3 ட்வீட்டுகளைப் போட்ட அவர் அத்தோடு டிஸ்கனெக்ட் ஆகி விட்டார். ஆனால் டிவிட்டரிலிருந்து அவர் டிஆக்டிவேட் ஆகவில்லை.

முதலில் அவர் போட்ட டிவீட்டில் டிவிட்டரில் எந்த நல்லதும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார் மஸ்க். அடுத்த டிவீட்டில், ரெட்டிட் நல்லாருக்கு என்று கூறியிருந்தார். 3வது டிவீட்டில் தான் ஆப்லைனுக்குப் போவதாக கூறியிருந்தார்.

சர்ச்சை

தொடர்ந்து டிவீட்டுகள் போட்டு கொண்டிருக்கும் வழக்கம் உடையவர் மஸ்க். ஆனால் டிவீட்டுகள் மூலம் முதலீட்டாளர்களை அவர் தவறாக திசை திருப்புவதாக ஒரு சர்ச்சை அமெரிக்காவில் வெடித்தது. இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவின் பங்கு சந்தை ஆணையமே முன்வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

என்ன கோபம்

இந்த கோபத்தில்தான் அவர் டிவிட்டரை விட்டு டிஸ்கனெக்ட் ஆகி விட்டாரா என்று தெரியவில்லை. டிவிட்டரில் மஸ்க்குக்கு 29 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பான பேச்சு

மஸ்க் கடந்த மாதம்தான் ஒரு பஞ்சாயத்தில் சிக்கினார். சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் குகையில் சிக்கிய 12 சிறார்களை மீட்கும் பணி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பங்கேற்ற இங்கிலாந்து சுரங்க வீரர் ஒருவரை பாலியல் ரீதியாக மஸ்க் டிவிட்டரில் விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து கோபமடைந்த அந்த வீரர் லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட்டில் மஸ்க் மீது வழக்குத் தொடர்ந்தார்.

ஜாலிக்காக சொன்னேன்

ஜாலிக்காக சொன்னேன்

மஸ்க்கின் இந்த விமர்சனம் பலரது கண்டனங்களையும் வாரிக் கொண்டு வந்தது. ஆனால் தான் சொன்ன வார்த்தை அவதூறானது அல்ல.. மாறாக தென் ஆப்பிரிக்காவில் இந்த வார்த்தையை ஜாலியான கிண்டலுக்காக பயன்படுத்துவது வழக்கம் என்று கூறியிருந்தார் மஸ்க். ஆனால் தற்போது வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. டிசம்பர் 2ம் தேதி வழக்கின் விசாரணை நடைபெறவுள்ளது.

ரெட்டிட்டுக்கு வந்த அவசரம்

இதற்கிடையே, ரெட்டிட் குறித்து எலான் மஸ்க் போட்ட டிவீட்டைப் பார்த்த அந்த நிறுவனம் மஸ்க்குக்கு நன்றி சொல்லி புளகாங்கிதம் அடைந்துள்ளது

போகாதீங்க வாங்க பாஸ்

போகாதீங்க வாங்க பாஸ்

இந்த நிலையில்தான் டிவிட்டர் மீது தனது கோபத்தைக் காட்டியுள்ளார் மஸ்க். மஸ்க் போட்டுள்ள லேட்டஸ்ட் டிவீட்டுக்கு பலரும் கவலை தெரிவித்துள்ளனர். விரைவில் அவர் மீண்டும் டிவிட்டருக்குத் திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

English summary
Tesla chief Elon Musk has said that he is going offline from the Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X