For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

25 தமிழர்களை சுட்டுக்கொன்ற நாயுடுவை கைது செய்க.. அமெரிக்க மேயருக்கு பறந்த மெயில்கள்!

செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் கொலை சம்பவத்திற்காக, சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய வேண்டும் என்று இ-மெயில் புகாரில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கூறி அம்மாநில போலீசாரால் 25 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின், இர்விங் நகர மேயருக்கு அனாமதேய இ-மெயில் கோரிக்கைகள் சென்று குவிந்துள்ளன.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள இர்விங் நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், இர்விங் நகர மேயர் பேத் வான் டுய்ன்-னுக்கு வந்த சில இ-மெயில்கள் அவரை தூக்கி வாரிப்போட்டன.

இமெயிலை அனுப்பியது 'மனித உரிமைகளுக்காக போராடும் இந்தியர்கள்' என்ற பெயரிலான ஐடியில் செயல்படுவோர்களாகும்.

25 தொழிலாளர்கள்

25 தொழிலாளர்கள்

அந்த இ-மெயிலில், திருமலை அருகேயுள்ள சேசாச்சலம் வனப்பகுதியில் 25 தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றதாகவும், இவர்களை செம்மரம் கடத்தியதாக குற்றம்சாட்டி, இப்படி சரமாரியாக சுட்டுக் கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே தமிழர்கள் என்பது இதில் கவனிக்கத்தக்கதாகும்.

இ-மெயில் புகார்

இ-மெயில் புகார்

இந்த கொலை சம்பவத்திற்காக, சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய வேண்டும் என்று இ-மெயில் புகாரில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த இ-மெயில்கள் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களால் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டாலும், அதன் பின்னணி பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்கொடை

நன்கொடை

அமெரிக்க குடிமக்களிடமிருந்து அதிகப்படியான நன்கொடையை அனுமதியின்றி சந்திரபாபு நாயுடு பெற்றுவருவதாகவும் இ-மெயில்களில் குற்றம்சாட்டப்பட்டன. அமெரிக்க முதலீட்டாளர்கள், ஆந்திராவை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களிடம், ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை அமைக்க நிதி உதவி கோரி சந்திரபாபு நாயுடு பயணம் மேற்கொண்டுள்ளார்.

விசாரணை

விசாரணை

இ-மெயில் புகார்களை தொடர்ந்து, அவர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு போலீசார் சென்று விசாரித்து பார்த்தபோது, அது அனுமதி பெறப்பட்டு நடைபெறும் நிகழ்ச்சி என்பது உறுதி செய்யப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Anonymous emails asking Mayor of Irving, Texas Mr.Beth Van Duyne to arrest Andhra Pradesh Chief Minister Nara Chandrababu Naidu who is on visit to that city has created a major flutter. Naidu is in the US for a week on an official tour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X