For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடர் கலவரம்.. பப்புவா நியூகினியாவில் அடுத்த 9 மாதத்திற்கு நெருக்கடி நிலை பிரகடனம்

பப்புவா நியூகினியாவில் அடுத்த 9 மாதத்திற்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

மொரெசுபி துறை: பப்புவா நியூகினியாவில் அடுத்த 9 மாதத்திற்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பப்புவா நியூகினியாவில் சென்ற வருடம் சதர்ன் ஹைலேண்ட் மாகாணத்திற்கான ஆளுநர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போவி என்ற நபர் வெற்றிபெற்றார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட இரண்டு பேர், இந்த வெற்றிக்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.

Emergency introduced in Papua New Guinea for next 9 months

இதனால் சென்ற வாரம் நீதிமன்றம், போவி பெற்ற வெற்றியை நிறுத்தி வைப்பதாக தீர்ப்பளித்தார்கள். இதையடுத்து போவியின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட துவங்கினார்கள். தொடர்ந்து பல இடங்களில் போராட்டம் செய்து கலவரம் செய்தனர்.

போராட்டத்தின் போது, அவர்கள் மக்கள் பயணிக்கும் விமானம் ஒன்றிற்கு தீ வைத்தனர். பல கட்டங்களுக்கு தீ வைத்தனர். இதனால் 20க்கும் அதிகமான கட்டிடம் நாசமாகி உள்ளது. மேலும் போலீஸ் வாகனம், கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றுக்கும் தீ வைத்துள்ளனர்.

கலவரம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்து சென்றதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பீட்டர் ஓ-நீல்அறிவித்துள்ளார்.

English summary
Emergency introduced in Papua New Guinea for next 9 months due to heavy riot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X