For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் ரோபோக்கள் அடுத்த வருடம் விற்பனைக்கு வரும் – ஜப்பானில் அறிமுகம்

Google Oneindia Tamil News

டோக்கியோ: மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் புதிய ரோபோ ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள மிகப்பெரிய ரோபோ சந்தைகளில் ஜப்பானும் ஒன்றாகும்.

கடந்த வருட கணக்கீட்டின்படி இந்நாட்டின் மொத்த வணிக சந்தை மதிப்பீடு 860 பில்லியன் யென்னாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Emotional Robot Set for Sale in Japan Next Year

பிறப்பு விகிதம் குறைந்தும், வயதனவர்களின் மக்கள் தொகை அதிகரித்தும் காணப்படும் காலகட்டத்தில் ரோபோக்களின் தேவை இன்னமும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

வயதானவர்களை கவனிக்க:

தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து சம்பளவிகிதம் அதிகரித்து வருவதுமட்டுமின்றி, வீடுகளில் வயதானவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டியும் இந்த ரோபோக்கள் அங்கு பயன்படுத்தப்படுகின்றன.

பெப்பர் ரோபோ:

இதுபோன்ற பயன்பாடுகளில் மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் பெப்பர் என்ற புதிய ரோபோவை ஜப்பானின் சாப்ட்பேங்க் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உணர்வுகள் அறியும் ரோபோ:

செயற்கை நுண்ணறிவு அமைப்பும், உணர்ச்சிகளை அறியும் ஒரு புதிய தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்படுவதால் இந்த ரோபோவினால் ஒருவரின் சைகைகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், குரல் தொனிகள் போன்றவற்றை அறிந்துகொள்ள இயலும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

திறமை வாய்ந்த ரோபோ:

இதனால் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் தொடர்பு கொள்வதுபோல் இந்த ரோபோக்களிடமும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் என்றும், அது பல்வேறு பணிகளையும் செய்யும் திறமை கொண்டது என்றும் சாப்ட்பேங்க் குறிப்பிட்டுள்ளது.1,98,000 யென் விலை கொண்ட இந்த ரோபோ அடுத்த வருடம் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வர உள்ளது.

இதயமும் உள்ள ரோபோ:

எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் இருப்பவர்களை இதயமற்ற ரோபோக்கள் என்று மக்கள் குறிப்பிடுவதுண்டு. ஆனால் முதன்முறையாக உணர்ச்சிகளையும், இதயத்தையும் கொண்ட ரோபோ தங்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றது என்று இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான மசயோஷி சோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாதிரி மக்கள் பார்வைக்கு:

இன்று முதல் தங்களுடைய விற்பனை நிலையங்களில் இந்த வகையான ரோபோக்களின் மாதிரிகளை காட்சிக்கு வைத்து வாடிக்கையாளர்களை அவற்றுடன் தொடர்புகொள்ள வைக்கும் திட்டத்தையும் இவர்கள் செயல்படுத்த உள்ளனர்.

English summary
A cooing, gesturing humanoid on wheels that can decipher emotions has been unveiled in Japan by billionaire Masayoshi Son who says robots should be tender and make people smile. Son’s mobile phone company Softbank said Thursday that the robot it has dubbed Pepper will go on sale in Japan in February for 198,000 yen ($1,900). Overseas sales plans are under consideration but undecided.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X