For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்க்கிங்கில் கிடந்த 530 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னரின் "பாடி"... உரிய மரியாதையுடன் மீண்டும் அடக்கம்

Google Oneindia Tamil News

லண்டன்: கார் பார்க்கிங் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 530 ஆண்டுகளுக்கு முந்தைய இங்கிலாந்து மன்னரின் உடல் உரிய மரியாதையுடன் மீண்டும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1154ம் ஆண்டு முதல் 1485 வரை பிரான்சில் இருந்து இங்கிலாந்து வந்து குடியேறிய பிளாண்ட்ஜெனட் என்ற ஒரு பிரிவினர் அங்கு லீசெஸ்டர் என்ற பகுதியை ஆண்டு வந்தனர். அந்த வம்சத்தின் கடைசி மன்னராக இருந்தவர் மூன்றாம் ரிச்சர்ட்.

இவர் 1485ம் ஆண்டு நடந்த ஒரு போரில் இறந்து விட்டார். அப்போது அவரது உடலை அங்கிருந்தவர்கள் எவ்வித மரியாதையும் செய்யாமல், சவப்பெட்டியில் கூட வைக்காமல் ஓரிடத்தில் போட்டு மண்ணை வைத்து மூடி விட்டுப் போய் விட்டனர் போலும்.

England's Richard III gets final burial

இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஒரு புதை பொருள் ஆராய்ச்சியாளர் தற்செயலாக கார் பார்க்கிக் ஒன்றில் அடிப்பகுதியில் இருந்து சில எலும்புகளைக் கண்டெடுத்தார். அவற்றை ஆய்வு செய்த லீசெஸ்டான் பல்கலைக்கழகம், அது மூன்றாம் ரிச்சர்ட் மன்னருடையது என்பதைக் கண்டுபிடித்தனர். பல்வேறு ரசாயன சோதனைகளுக்குப் பின்னர் அது ரிச்சர்ட்டின் உடல் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கிடைக்கப்பெற்ற அவரது உடல் பாகங்கள் அனைத்தும் ஒரு சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, மன்னருக்குரிய மரியாதையோடு லீசெஸ்டரில் அடக்கம் செய்யப்பட்டது.

English summary
Dug out of a car park five centuries after his mutilated body was unceremoniously interred, England's Richard III had finally given a burial fit for a king
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X