For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரி பயங்கர கருப்பா இருக்கும்.. ஆனா இந்த கிரகம் கருப்பா பயங்கரமா இருக்கு பாஸ்!

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம் ஒன்றை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்த கிரகம் கருப்பா பயங்கரமா இருக்கு பாஸ்!

    லண்டன்: துளியும் வெளிச்சம் இல்லாத நிலக்கரியை விட கருமையான புதிய கிரகம் ஒன்றை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    நமது பால்வெளி மண்டலத்தைத் தாண்டியும் பல கோடிக்கணக்கான நட்சத்திரக்கூட்டங்கள் வானில் உள்ளன. இவற்றில் பல கிரகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவேயில்லை. தொடர்ந்து இவை குறித்து உலகநாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில், இங்கிலாந்தின் கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஹெப்ளர் தொலைநோக்கி மூலம் இந்தப் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பூமியிலிருந்து 466 ஒளி ஆண்டு

    பூமியிலிருந்து 466 ஒளி ஆண்டு

    பூமியில் இருந்து சுமார் 466 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள இந்தப் புதிய கிரகத்திற்கு ‘வாஸ்ப் - 104 பி' என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். பொதுவாக கிரகங்கள் தங்கள் அருகில் உள்ள நட்சத்திரங்களின் ஒளியை உமிழும் தன்மை கொண்டவை.

    இருண்ட கிரகம்

    இருண்ட கிரகம்

    எனவே, அவை ஓரளவு வெளிச்சம் கொண்டவையாகவே காணப்படும். ஆனால், இந்தப் புதிய கிரகமானது உமிழும் தன்மை குறைந்ததாக உள்ளது. எனவே, இது நிலக்கரியை விட மிகவும் அடர்ந்த கருமை நிறத்தில் காணப்படுகிறது.

    நி்றமில்லாத கிரகம்

    நி்றமில்லாத கிரகம்

    அதாவது, ‘இந்தப் புதிய கிரகமானது நட்சத்திரங்களில் இருந்து கிடைக்கும் ஒளியில் 99 சதவீதத்தை உள்வாங்கிக்கொண்டு ஒரு சதவீதத்தை மட்டுமே . எனவே இந்தப் புதிய கிரகத்தின் நிறம் என்ன என்பதை கண்டறிய இயலவில்லை' என்கின்றனர் விஞ்ஞானிகள்.

    வாயுக்கள் அடங்கிய கிரகம்

    வாயுக்கள் அடங்கிய கிரகம்

    வியாழன் போன்ற வாயுக்கள் அதிகமாக உள்ள கிரகங்கள், ஒளியை அதிகமாக ஈர்க்கின்றன. எனவே, இந்தப் புதிய கிரகமும் வியாழனை போன்ற அதிக வாயுக்கள் கொண்ட கிரகமாக இருக்கலாம், இதனால்தான் அதிக ஒளியை ஈர்த்து கொள்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    இந்த கிரகம் தனது வட்ட பாதையில் சுற்றுவதற்கு 1.76 நாட்கள் எடுத்துக்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The England scientists have found a new darkest planet in the universe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X