For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி "A E I O U" கிடையாது... வெறும் "E U" மட்டும்தான்.. ஆங்கிலத்தை ஓரம் கட்டும் ஐரோப்பிய யூனியன்!

Google Oneindia Tamil News

லண்டன்: ஐரோப்பிய யூனியன் தேவையில்லை என்று இங்கிலாந்து முடிவு செய்து விட்டதால் தங்களது அலுவல் மொழிகளின் பட்டியலிலிருந்து ஆங்கிலத்தைத் தூக்கி விட ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ஐரோப்பிய யூனியனின் 28 நாடுகளில் இங்கிலாந்தைத் தவிர்த்து இனி பிற ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம் அலுவல் மொழியாக இருக்காது. ஆங்கில்தை இனி ஐரோப்பிய நாடுகள் ஓரம் கட்டி விடும் என்று தெரிகிறது.

ஐரோப்பிய யூனியனில் உள்ள நிறுவனங்களில் தற்போது ஆங்கில்தான் அனைவராலும் முதல் மொழியாக விரும்பப்படுகிறது. இனி அந்த நிலை இருக்காது. ஆங்கிலம் அறவே ஒதுக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

அது எங்க இஷ்டம்

அது எங்க இஷ்டம்

இதுகுறித்து போலந்து நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர் தனுத்தா ஹப்னர் கூறுகையில், ஒவ்வொரு ஐரோப்பிய யூனியன் நாடும் தனது அதிகாரப்பூர்வ மொழி என்பதை அறிவிக்கும் உரிமை உள்ளது. அயர்லாந்து நாடு, காலிக் மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்துள்ளது. மால்டா, மால்டீஸை மொழியாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து மட்டும்தான் ஆங்கிலத்தை மொழியாக அறிவித்திருந்தது.

பிரிட்டனே போயிருச்சே..

பிரிட்டனே போயிருச்சே..

ஐரோப்பிய யூனியனில் ஆங்கிலம் பிராதன மொழியாக இருக்கலாம். அதேசமயம், இங்கிலாந்தே இல்லை என்று வரும்போது ஆங்கிலம் மட்டும் எப்படி நீடிக்க முடியும் என்ற கேள்வியும் எழுவதை யாரும் தடுக்க முடியாது என்றார் அவர்.

சட்டம் மாறும்

சட்டம் மாறும்

ஆங்கிலத்தை ஓரம் கட்டும் வகையில் ஐரோப்பிய யூனியன் சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலத்தை ஓரம் கட்ட வேண்டுமானால் (ஆங்கிலம் என்று இல்லை, எந்த மொழியாக இருந்தாலும்) உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாற்றம் ஐரோப்பிய யூனியனால் ஏற்றுக் கொள்ளப்படும்.

24 அலுவல் மொழிகள்

24 அலுவல் மொழிகள்

ஐரோப்பிய யூனியனில் தற்போது 24 அலுவல் மொழிகள் உள்ளன. தினசரி செயல்பாடுகள் இந்த 24 மொழிகளில்தான் நடைபெறுகின்றன. ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம், அமைச்சர்கள் குழு ஆகியவற்றில் பிரதானமாக ஆங்கிலமும், பிரெஞ்சும், ஜெர்மனும் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து நாடுகளில்தான் ஆங்கிலம்

ஐந்து நாடுகளில்தான் ஆங்கிலம்

ஐரோப்பிய நாடுகளில் ஐந்து நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மற்ற நாடுகளில் ஜெர்மன்., பிரெஞ்சு, ஸ்வீடிஷ் என அந்தந்த நாட்டு மொழிகளே பிரதானமாகும். ஆங்கிலமே இல்லாத ஐரோப்பிய நாடுகள்தான் அதிகமும் கூட.

ஆங்கிலத்தை பிடிக்குமா பிரெஞ்சு!?

ஆங்கிலத்தை பிடிக்குமா பிரெஞ்சு!?

இதற்கிடையே, ஆங்கிலம் போய் விட்டால் அந்த இடத்தை பிரெஞ்சு பிடித்து விடுமோ என்ற அச்சம் ஜெர்மனிக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய யூனியனின் கமிஷனர் (ஜெர்மனியைச் சேர்ந்தவர்) குந்தர் ஓட்டிங்கர் கூறுகையில், ஆங்கிலம் பல உலக நாடுகளில் பேசப்படும் மொழி. உலக மொழியாகவும் உள்ளது. அதை அனைவரும் ஏற்க முடியும். ஒரு வேளை ஸ்காட்லாந்து (தற்போது பிரிட்டனின் ஒரு அங்கம் இது) தனியாக பிரிந்து வந்து, ஐரோப்பிய யூனியனில் இணைந்தால் ஆங்கிலத்தை முதல் மொழியாக அறிவிக்க அது கோரலாம் என்றார் சிரித்தபடி.

English summary
The English language may be one of the casualties of Brexit as it emerged that no state other than the UK has registered it as a primary language among the 28 countries within the European Union. English has been the top choice for European Union (EU) institutions but Britain's vote to leave the union last week could trigger a ban on its use.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X