For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெண் கழுத்துக் கழுகுடன்.. பாய்ந்து பாய்ந்து சண்டை போட்ட சீகல் பறவைகள்.. அலாஸ்காவில்

Google Oneindia Tamil News

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்காவில் வெள்ளை நிறக் கழுத்துடைய பால்ட் கழுகு, சீகல் கடல் பறவைகளுடன் சண்டையிட்ட மயிர் கூச்செரியும் சம்பவத்தினைப் படம்பிடித்துள்ளார் புகைப்படக்கலைஞர் ஒருவர்.

பால்ட் கழுகு அமெரிக்காவின் சக்தியின் அடையாளமாகவும், அமெரிக்க சுதந்திர அடையாள சின்னமாகவும் கொண்டாடப்படும் பறவையாகும்.இந்த கழுகு தனது உணவுக்காக நடுவானில் கடல் பறவைகளிடம் சண்டையிட்ட அற்புதமான காட்சியை புகைப்பட கலைஞர் டேவிட கேனலஸ் அலஸ்காவில் படம் பிடித்து உள்ளார்.

EPIC BATTLE BETWEEN BALD EAGLE, SEAGULLS IN ALASKA

கடல்பகுதியில் உணவு தேடிகொண்டிருந்த பால்ட் கழுகு ஒன்றிற்கும், கடல் பறவைகள் இரண்டுக்கும் மோதல் ஏற்பட்டது. கழுகின் மேல் புறம் ஒரு கடல் பறவையும், கீழ் புறம் ஒரு கடல் பறவையும் வெறித்தனமாக பறந்து, பறந்து தாக்குதல் நடத்தின.

எனினும், ராஜ கழுகின் சீற்றத்தின் முன் இரு பறவைகளும் தோல்வி அடைந்தன. துரதிர்ஷ்டவசமாக இந்தக் கடுமையான போரில் பின்தங்கிய நிலையில் இரண்டு சீகல் பறவைகளும் உயிர் இழந்தன. போரில் கழுகு வெற்றி அடைந்ததுடன் தன்னுடைய உணவுக்கும் வழி செய்து கொண்டது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி அனைவரையும் கவர்ந்து வருகின்றது.

English summary
The eagle had one of the seagulls firmly grasped in its talons while another seagull was trying to protect his friend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X