For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலரை பாதித்த எரர் 53.. ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ. 45 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்

ஆப்பிள் நிறுவனம் தனது போன்களில் அடுத்தடுத்த சில மாற்றங்களையும், பிரச்சனைகளையும் செய்ததை அடுத்து, தற்போது ஆஸ்திரேலியாவில் அந்த நிறுவனம் 45 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ. 45 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்-வீடியோ

    சிட்னி: ஆப்பிள் நிறுவனம் தனது போன்களில் அடுத்தடுத்த சில மாற்றங்களையும், பிரச்சனைகளையும் செய்ததை அடுத்து, தற்போது ஆஸ்திரேலியாவில் அந்த நிறுவனம் 45 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக ஆப்பிள் போன்களின் வேகம் குறைக்கப்பட்டு வந்தது. ஆப்பிள் பேட்டரியில் இருக்கும் பிரச்சனை காரணமாகவே இப்படி நடந்ததாக ஆப்பிள் நிறுவனம் கூறியிருந்தது.

    ஆப்பிள் பேட்டரியில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆப்பிள் நிறுவனம்தான் இந்த வேக குறைப்பு வேலையை செய்து இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது இந்த தவறு காரணமாக ஆப்பிள் நிறுவனம் பிரச்சனையில் சிக்கியுள்ளது.

    பிரச்சனை

    பிரச்சனை

    ஆப்பிள் நிறுவனம் புதிய சாப்ட்வேர் அப்டேட் ஒன்று செய்தது. இதனால் ஆப்பிள் 6 மற்றும் அதற்கு முந்தைய மாடல் மொபைல்களின் வேகம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வந்தது. இன்னும் சிலருக்கு போன் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் போதே ஸ்விட்ச் ஆப் ஆகி இருக்கிறது. உலகில் பல நாடுகளில் இந்த பிரச்சனை இருந்தது.

    எரர் 53 என்றால் என்ன

    எரர் 53 என்றால் என்ன

    மேலும் எரர் 53 எனப்படும் பிரச்சனை ஆப்பிள் போன்களில் ஏற்பட்டது. இதுகுறித்து பலரும் ஆப்பிள் நிறுவனத்திடம் புகார் அளித்து இருந்தனர். இந்த பிரச்சனை காரணமாக பலரும் அவர்களது ஆப்பிள் போன்களில் எதுவும் டவுன்லோட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் எதுவும் அப்டேட் செய்ய முடியாத நிலையும் உருவானது.

    சரி செய்யவில்லை

    சரி செய்யவில்லை

    இதை சரி செய்வதற்காக பலர் சர்விஸ் சென்டர் சென்று இருக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் 275 பேரின் போனை சரி செய்ய ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது. அவர்கள் வேறு இடத்தில் போனை ஏற்கனவே சரி செய்து இருக்கிறார்கள் என்று கூறி அவர்கள் போனை சரி செய்ய ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது. இதனால் அவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.

    அபராதம்

    அபராதம்

    இந்த வழக்கில் தற்போது ஆஸ்திரேலியா நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, ஆப்பிள் நிறுவனத்திற்கு மொத்தம் 45 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    English summary
    Error 53: Apple apologies for slowing down I Phone model, Australia fines tech giant for the mistake. Apple fined 45 crore ruppes for misleading customers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X