For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுக்கு முன் இப்படி நடந்தது இல்லை.. ஐரோப்பாவின் முக்கிய கட்சிகளை மொத்தமாக இணைத்த சிஏஏ.. என்ன ஆகுமோ!

சிஏஏவிற்கு எதிராக ஐரோப்பாவில் இருக்கும் முக்கிய கட்சிகள் பல ஒன்று சேர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய அரசுக்கு பின்னடைவு?| EU against CAA: India is facing a major diplomatic setback

    லண்டன்: சிஏஏவிற்கு எதிராக ஐரோப்பாவில் இருக்கும் முக்கிய கட்சிகள் பல ஒன்று சேர்ந்துள்ளது. கொள்கை ரீதியாக நிறைய முரண்பாடு கொண்ட கட்சிகளும் கூட இந்த தீர்மானத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளது.

    இந்தியா முழுக்க சிஏஏ போராட்டம் வலுவடைந்து கொண்டே செல்கிறது. நாடு முழுக்க பல மாநிலங்களில் மக்கள் சிஏஏவிற்கு எதிராக கடுமையாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் சிஏஏ சட்டம் காரணமாக பல லட்சம் மக்கள் நாட்டை இழந்து அகதிகளாக மாறும் நிலை ஏற்படலாம் என்று ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 600 எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் 6 முக்கிய அம்சங்களை கொண்ட தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். ஐந்து பக்கங்களை கொண்ட அந்த தீர்மானத்தில், இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள சிஏஏ அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளனர்.

    தீவிரமாகும் சிஏஏ போராட்டம்.. அதிகரிக்கும் வெளிநாட்டு அழுத்தம்.. தவறான இடத்தில் கைவைத்துவிட்டதா அரசு?தீவிரமாகும் சிஏஏ போராட்டம்.. அதிகரிக்கும் வெளிநாட்டு அழுத்தம்.. தவறான இடத்தில் கைவைத்துவிட்டதா அரசு?

    எத்தனை எம்பிக்கள்

    எத்தனை எம்பிக்கள்

    ஐரோப்பா யூனியனில் உள்ள 751 எம்பிக்களில் மொத்தம் 600 எம்பிக்கள் இப்படி ஒன்றாக சேர்ந்து வந்து இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இதற்கு முன் எந்த தீர்மானத்திற்கு அவர்கள் இப்படி ஒன்றாக சேர்ந்து வந்தது கிடையாது. ஆம், சிஏஏவிற்கு எதிராக ஐரோப்பா எம்பிக்கள் எல்லோரும் மொத்தமாக ஒன்று கூடி உள்ளனர் என்றுதான் கூற வேண்டும். ஐரோப்பாவின் இந்த நடவடிக்கை உலக அளவில் இந்தியாவிற்கு பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன கட்சிகள்

    என்ன கட்சிகள்

    அதேபோல் எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சிகளும் கூட இதனால் ஒன்று சேர்ந்துள்ளது. ஆம் ஐரோப்பாவில் இருக்கும் நாடுகளின் பல ஆளும் கட்சிகள் இந்த சிஏஏவை எதிர்த்துள்ளது. மொத்தம் அந்நாட்டில் இருக்கும் 7 குழுவான எம்பிக்களில், 6 குழுக்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. அதனால் இந்த தீர்மானம் கண்டிப்பாக நிறைவேறும் என்று கூறுகிறார்கள். அப்படி தீர்மானம் நிறைவேறும் பட்சத்தில், ஐரோப்பாவில் இருக்கும் எல்லா நாடுகளும் இந்தியாவை ஒன்றாக சேர்ந்து எதிர்க்கும்.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    இந்த தீர்மானம் மசோதாவை ஐரோப்பாவின் மிக முக்கிய கட்சியான சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகவாதிகளின் முற்போக்கு கூட்டணி கொண்டு வந்துள்ளது. இதில் மொத்தம் 182 எம்பிக்கள் உள்ளனர். இன்னொரு பக்கம் ஐரோப்பா யூனிட்டட் லெப்ட், நோர்டிக் கிரீன் லெப்ட் இதை ஆதரிக்கிறது. இவர்களுக்கு 41 எம்பிக்கள் ஆதரவு உள்ளது. மேலும் கிரீன்ஸ்/ ஐரோப்பா பிரீ லைன்ஸ் இதை ஆதரிக்கிறது. இவர்களுக்கு 75 எம்பிக்கள் உள்ளனர்.

    மிக கடினம்

    மிக கடினம்

    மேலும் ஆச்சர்யமாக பழமைவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் கூட்டணியும் இந்த மசோதாவை ஆதரிக்கிறது. இதில் 66 எம்பிக்கள் இருக்கிறார்கள். மேலும் ரினீவ் ஐரோப்பா குரூப்பை சேர்ந்த 108 எம்பிக்கள் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறார்கள். உலகம் முழுக்க அதிக சக்தி வாய்ந்த எம்பிக்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களுக்கு அரசியல் ரீதியாக உலகம் முழுக்க அதிக வலிமை உள்ளது. இதனால் ஐரோப்பா கொண்டு வரும் தீர்மானம் அதிக கவனம் பெறுகிறது .

    English summary
    Major parties with different ideologies came together to pass a resolution against CAA in EU.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X