For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னது பாத்டப்பில் மயங்கி உயிரிழப்பதெல்லாம் அமெரிக்காவுல சாதாரணமாம்பா!

தினசரி ஒருவர் பாத்டப்பில் மயங்கி விழுந்து உயிரிழப்பதென்பது அமெரிக்காவில் சர்வசாதாரணமாம்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்ரீதேவி குடித்து இருந்தார்...கன்ஃபார்ம் செய்த 2 சோதனைகள்-வீடியோ

    வாஷிங்டன் : தினசரி ஒருவர் பாத்டப்பில் மயங்கி விழுந்து உயிரிழப்பதெல்லாம் அமெரிக்காவில் சர்வசாதாரணமாக நடக்குமாம். இது போன்ற சம்பவங்களுக்கு அதிக அளவில் மது அருந்துதல், போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு பாத்டப்பில் குளிக்கச் செல்வது போன்றவையே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    நடிகை ஸ்ரீதேவி குளியல் அறையில் மயங்கி விழுந்து பாத் டப்பில் தான் அவரது உயிர் பிரிந்தது என்ற செய்தி பரவத் தொடங்கியது முதலே மக்களின் கவனம் பாத்டப் மீது திரும்பியுள்ளது. எங்கு பார்த்தாலும் ஒரே பாத் டப் பற்றி பேச்சாகத் தான் இருக்கிறது.

    இந்த சூழ்நிலைக்கு ஏற்ப அமெரிக்காவில் நடக்கும் பாத் டப் உயிரிழப்புகள் பற்றிய செய்தியும் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தினந்தோறும் பாத்டப்பிலோ அல்லது ஸ்பாவிலோ மூழ்கி ஒருவர் உயிரிழப்பது என்பது சர்வசாதாரணமான விஷயமாம்.

    அமெரிக்காவில் அதிகம்

    அமெரிக்காவில் அதிகம்

    குறிப்பாக அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளில் தான் இது அதிகமாம். இப்படி உயிரிழப்பவர்கள் அடிக்கடி மது அருந்துபவர்களாகவோ அல்லது சூடான நீரில் குளிக்க பாத்டப்பிற்குள் செல்லும் முன் போதைப்பொருள் உட்கொண்டவர்களாகவோ இருப்பார்களாம்.

    முதல் இடத்தில் கலிபோர்னியா

    முதல் இடத்தில் கலிபோர்னியா

    நியூயார்க் நகர மக்களை விட பாத்டப்பில் மூழ்கி இறப்பவர்களில் கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்தவர்களே அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1999 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 1,676 அமெரிக்கர்கள் பாத்டப்பில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    இறப்பவர்கள் யார்?

    இறப்பவர்கள் யார்?

    சராசரியாக ஆண்டுக்கு 335 பேர் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குழந்தைகள்,சிறுவர்கள் மற்றும் வயதில் மூத்தவர்களே அதிக ரிஸ்க்குகளை சந்திப்பவர்களாக இருக்கின்றனர்.

    பொதுசுகாதாரத்துறை மறுப்பு

    பொதுசுகாதாரத்துறை மறுப்பு

    ஆனால் இந்த பாத்டப் மரணங்கள் பற்றிய புள்ளிவிவரங்களுக்கு அந்த நாட்டின் பொது சுகாதாரத்துறை மறுப்பு தெரிவிக்கிறது. சில மரணங்கள் தற்கொலைக்காக நடக்கின்றன, எனினும் பாத்டப்பில் மூழ்கி உயிரிழப்பது என்பது பற்றிய புரிதல் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது, ஆனால் அது பற்றிய ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    English summary
    An American drowns nearly every day in a bathtub, and the deaths occur disproportionately in Western states, experts says victims often drink or take drugs while soaking in hot water.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X