For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எப்பப் பார்த்தாலும் ஆன்லைன்லயே இருந்தா "குண்டூஸ்" ஆயிடுவீங்களாம்... ஆய்வில் தகவல்!

Google Oneindia Tamil News

டெட்ராய்ட்: அதிக நேரம் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் ஏற்படுவதாகவும், உடல் எடை அதிகரிப்பதாகவும் அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமை இணையத்திற்கு உண்டென்றால், அதனைக் கைக்குள் அடைத்த பெருமை செல்போனையே சேரும். அதிலும் இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பான்மையானோர் எப்போதும் சமூகவலைதளப் பக்கங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இப்ப நான் அச்சுன்னு தும்மினேன் என்பது முதல் நான் தற்கொலை செய்யப் போகிறேன் என்பது வரை அனைத்தையுமே சமூகவலைதளப் பக்கங்களில் அப்டேட் செய்து விடுகின்றனர்.

மருத்துவர்களின் ஆய்வு...

மருத்துவர்களின் ஆய்வு...

ஆனால், இவ்வாறு எப்போதும் இணையத்திலேயே மூழ்கிக் கிடப்பதால் அதிக எடை ஏற்படும் அபாயமும், அதிக ரத்த அழுத்தமும் ஏற்படும் என அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இளம் தலைமுறை...

இளம் தலைமுறை...

இது தொடர்பாக அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் அமைந்துள்ள ஹென்றி போர்டு மருத்துவமனையின் முன்னணி மருத்துவர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வானது 14 முதல் 17 வயதுடைய 335 ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது.

உடல் எடை அதிகரிக்கும்...

உடல் எடை அதிகரிக்கும்...

ஆய்வின் முடிவில் எவ்வளவு அதிகமாக இணையத்தை பயன்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக ரத்த அழுத்தமும் உடல் எடையும் அதிகரிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு 25 மணி நேரம்...

வாரத்திற்கு 25 மணி நேரம்...

வாரத்திற்கு சராசரியாக 25 மணி நேரம் இணையத்தை பயன்படுத்தும் 134 பேரில் 26 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், அதேபோல் அவர்களில் 46 சதவீதம் பேர் உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

English summary
Scientists at Detroit's Henry Ford Hospital summarised their findings in a report, which says teenagers who spend more than 14 hours a week on the internet are more susceptible to "elevated blood pressure".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X