For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெர்மனியில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 12 பேர் காயம்

By Siva
Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனியில் திறந்தவெளியில் நடந்த இசை நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார், 12 பேர் காயம் அடைந்தனர்

ஜெர்மனியில் உள்ள அன்ஸ்பாக் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்தவெளியில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகே பார் ஒன்று உள்ளது.

Explosion in Germany: One killed, 12 injured

இந்நிலையில் பார் அருகே நேற்று இரவு திடீர் எந்று குண்டு வெடித்தது. இசை நிகழ்ச்சியை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார், 12 பேர் காயம் அடைந்தனர். பலியானவர் தான் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்தியவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் சீப்னர் கூறுகையில்,

வேண்டும் என்றே குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றார்.

English summary
A man got killed and 12 others injured after an explosion targeting an open air music festival in Germany on sunday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X