For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம்- சவுதி அருகே ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

Google Oneindia Tamil News

Recommended Video

    வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம்- ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்-வீடியோ

    டெஹ்ரான்: ஈரானுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் மீது சவுதி அருகே நடுக்கடலில் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    சவுதி அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், எண்ணெய் கப்பல் ஆகியவற்றின் மீது செப்டம்பர் 14-ல் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ஈரான் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    Explosion sets Iran oil tanker ablaze near Saudi

    ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி தீவிரவாதிகளே இத்தாக்குதல் நடத்தியதாகவவும் கூறப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. அத்துடன் வளைகுடா நாடுகளில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சவுதியின் ஜெட்டா துறைமுகம் அருகே ஈரானுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலால் எண்ணெய் கப்பல் நடுக் கடலில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

    கப்பலில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் கொட்டி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Iran's state-run news agency said that an explosion has struck an Iranian oil tanker off the coast of Saudi Arabia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X