For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசுமை பொங்கும் "பேஸ்புக்"கின் புதிய அலுவலகம்.. படிச்சுட்டு "லைக்" போடுங்க!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பேஸ்புக் நிறுவனம் புதிய தலைமை அலுவலகத்திற்கு குடிபெயர்ந்துள்ளது. மரங்கள் சூழ்ந்த 9 ஏக்கர் பசுமை கூரையுடன், 22 ஏக்கரில் 4,30,000 சதுர பரப்பில் இந்த புதிய அலுவலகம் அமைந்துள்ளது.

கலையம்சமும், நவீன வசதிகளும் இணைந்ததாக காட்சி அளிக்கும் இந்த பிரம்மாண்ட அலுவலகம் வியக்க வைக்க கூடியதாக இருப்பதை புகைப்படங்கள் உணர்த்துகின்றன.

Facebook

சமூக வலைத்தள சேவையை வழங்கும் பேஸ்புக் நிறுவன தலைமை அலுவலகம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மென்லோ பார்க்கில் அமைந்துள்ளது.

பேஸ்புக்கின் புதிய அலுவலகம்:

இந்நிலையில் பிரம்மாண்டமான அலுவலகத்தை தங்களுக்கென உருவாக்கி கொள்ளும் சிலிக்கான் வேலி நிறுவனங்களின் வழக்கப்படி பேஸ்புக்கும் புதிய தலைமை அலுவலத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

மூன்று வருட கட்டிடப்பணி:

கடந்த 2012 இல் இதற்கான பணிகள் துவங்கின. உலகப்புகழ் பெற்ற கட்டடக் கலைஞர் பிரான்க் ஜெரி இந்த அலுவலகத்துக்கான வடிவமைப்பை உருவாக்கினார்.

பணியாளர்கள் மாற்றம்:

பேஸ்புக்கின் தற்போதைய தலைமை அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த புதிய அலுவலகம் முழுவதும் தயாராகி அங்கு பணியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

ஒற்றை அறை அமைப்பு:

22 ஏக்கர் பரப்பில் 4,30,000 சதுர அடியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. இதன் கீழ் தளம், தனி அறைகள் இல்லாமல் பிரம்மாண்ட ஒற்றை அறையாக அமைந்துள்ளது.
சமூக உணர்வு நோக்கம்:

பேஸ்புக் சேவையின் மைய குறிக்கோளான சமூக உணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகிலேயே மிகப்பெரிய ஒற்றை தளத்தை திறந்த வெளி தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மார்க்கின் பேஸ்புக் பதிவு:

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே அறையில் பணியாற்றக்கூடிய வகையில் உருவாக்கி இருப்பதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் தனது பேஸ்புக் பதிவில் புதிய அலுவலகம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகம்:

திறந்த வெளி தன்மை கொண்டிருந்தாலும் ஊழியர்களுக்கான தனிப்பட்ட இடமும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். பேஸ்புக் ஊழியர்களுக்கான சிறந்த பொறியியல் இடத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த அலுவலகம் அமைந்துள்ளதாகவும் மார்க் தெரிவித்துள்ளார். கலை அம்சமும், நவீன வசதிகளும் இணைந்த வகையில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.

காலற நடக்க அலுவலக மாடி:

இதன் மாடியில் 9 ஏக்கர் பசுமை பரப்பு உள்ளது. அங்கு 400க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. பூங்காவில் நடப்பது போல அலுவலக மாடியில் காலாற நடக்கலாம். இங்கு கஃபே உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. இந்த அலுவலகத்தில் கலைப்படைப்புகளுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமிற்கு அனுமதி:

பேஸ்புக் ஊழியர்கள் இந்த புதிய அலுவலகத்திற்கு குடிபெயர்ந்துள்ள நிலையில், நிறுவனம் புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் பயனாளிகளை அழைத்து அலுவலகத்தை படம் பிடித்து பகிர்ந்து கொள்ள அனுமதித்துள்ளது.

வியக்க வைக்கும் அலுவலகம்:

அலுவலகத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புற அம்சங்களை படம் பிடித்து காட்டும் இந்த புகைப்படங்கள் பேஸ்புக் அலுவலகத்தை பார்த்து வியக்க வைக்கிறது.

எதிர்காலத்துக்கு மாறும் கூகுள்

மறுபக்கம் கூகுல் நிறுவனம் தனது கலிபோர்னியா தலைமை அலுவலகத்தை எதிர்காலத்தின் குறியீடுகளுடன் கூடிய அலுவலக வளாகமாக மாற்ற திட்டமிட்டு வருகிறது. இதை ஒரு ஆபீஸ் போல அல்லாமல் டிஸ்னிலேன்ட் போல அது வடிவமைத்து வருகிறது.

டெஸ்க்கே இல்லாத ஆபீஸ்

கிட்டத்தட்ட டெஸ்க்கே இல்லாத ஆபீஸ் என்று இதைக் கூறலாம். இந்த அலுவலகத்தை பொதுமக்களும் வந்து பார்வையிடும்படி வடிவமைக்கிந்றனர்.

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்த அலுவலக வளாகம் அமைகிறது. உள்ளூர் மக்களின் ஆதரவையும் இதற்காக திரட்டுகின்றனர். இந்தப் புதிய அலுவலக வளாகத்தை தாமஸ் ஹெதர்விக் மற்றும் ஜார்க் இங்கல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வடிவமைக்கின்றனவாம்.

அலுவலகத்துக்குள் பைக் ஓட்டலாம்

அலுவலக வளாகப் பகுதியில் ஹோட்டல்கள், பைக் செல்வதற்கான பாதைகள், சிறு சிறு பிசினஸ்களுக்கான வாய்ப்புகள் என விதம் விதமான கலவையுடன் வடிவமைத்துள்ளனர்.

டிராபிக் பிரச்சினை வருமே

ஆனால் கூகுளின் இந்த புதிய திட்டத்தால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் தவித்து வரும் மவுன்டைன் ஹில் பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசலாகும் என்று சிலர் கவலை தெரிவிக்கிறார்கள்.

English summary
Facebook has unveiled an enormous new office in Silicon Valley, which is large enough to hold a 9-acre park on its roof, and will house 2,800 workers in a single room. The new building in Menlo Park, California, measures 430,000 square feet and apparently has the 'largest open floor plan in the world'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X