For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட, இதுக்கெல்லாமா கண்காட்சி நடத்துவீங்க.. ஆனாலும் கலர்புல்லாத்தான் இருக்கு!

செக் குடியரசில் பொதுமக்கள் செய்துள்ள முகக்கவசங்களின் கண்காட்சி துவங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

பிரேகு: பொதுமக்கள் செய்துள்ள விதவிதமான முகக்கவசங்களைக் கொண்டு வித்தியாசமான கண்காட்சி ஒன்றை நடத்தியுள்ளது செக் குடியரசு.

கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்த உடனே, பொதுமக்கள் வெளியே செல்ல மாஸ்க் அணிவது கட்டாயம் என முதலில் அறிவித்த நாடுகளில் ஒன்று செக் குடியரசு. ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இதுவரை கொரோனா 8725 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 304 பேர் உயிரிழந்துள்ளனர்.

Face mask exhibition in Czech National Museum

ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் செக் குடியரசில் கொரோனா பாதிப்பு குறைவு தான். இருப்பினும் அங்கு ஆரம்பகட்டத்தில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், முகக்கவசம் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பொதுமக்களே தங்களுக்கு தேவையான முகக்கவசங்கள் தயாரித்துக் கொண்டனர்.

இந்நிலையில் பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிய சில வித்தியாசமான முகக்கவசங்களை மட்டும் தேர்வு செய்து, பிரேகு நகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கண்காட்சி வைத்துள்ளது செக் அரசு. வண்ணமயமான முகக்கவசங்கள், செக் குடியரசின் தேசிய கொடி போல் உள்ள முகக்கவசங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

"இன்று ஏராளமான பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. அடுத்த தலைமுறைக்கு நாம் எதை கொடுத்துவிட்டு போகப்போகிறோம் என்பதை இப்போதே உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். முகக்கவசங்கள் தான் இன்றைய சூழலின் சின்னமாக திகழ்கின்றன", கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் மரியா புரியநோவா.

கொரோனா ஒழிய.. கோயிலுக்கு வந்தவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி.. ஒடிஸாவில் திக் சம்பவம்கொரோனா ஒழிய.. கோயிலுக்கு வந்தவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி.. ஒடிஸாவில் திக் சம்பவம்

இந்த முகக்கவசக் கண்காட்சி வரும் திங்கட்கிழமை முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது. பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனும் உத்தரவை லேசாக தளர்த்தியுள்ள செக் அரசு. பொது போக்குவரத்து, அரசு அலுவலகங்களில் மட்டும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Czech National Museum opens face mask exhibition showcasing masks made by public.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X