For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி பேஸ்புக் பயன்படுத்தினால் மாசம் ரூ. 183 வாடகை கட்டணும்... புளியைக் கரைக்கும் புரளி!

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: உலகம் முழுவதும் உள்ள பேஸ்புக் பயனாளர்களின் வயிற்றில் ஒரு புதிய பூகம்பத்தை உருவாக்கி வருகின்றது "பேஸ்புக் கட்டணமயமாகின்றது" என்ற புரளி ஒன்று.

நேஷனல் ரிப்போர்ட் என்ற இணையதளம் வெளியிட்ட கட்டுரை ஒன்றில்தான் இந்த "பயங்கரமான" புரளிச் செய்தி வெளியாகி உள்ளது.

இச்செய்தி தற்போது அனைத்து ஊடகங்களிலும் வைரலாக பரவி வருகின்றது.

Facebook to charge $2.99 per month from November 1…

நவம்பர் 1 முதல் 183 ரூபாய்:

வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து மாதம் ஒன்றிற்கு 2.99 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 183 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

புகை வரவைத்த புரளி:

கற்பனையாகப் பரப்பப்பட்ட இந்த செய்தியால் பேஸ்புக்கிலே மூழ்கிக் கிடக்கும் பலரின் காதில் இருந்து புகை வரத்தொடங்கியுள்ளது.

போலிக் கட்டுரையால் பரபரப்பு:

பேஸ்புக் பயன்பாட்டையே தூக்கி எறியும் அளவிற்கு மக்களை கொண்டு சென்ற இந்த போலிக்கட்டுரையானது, இச்செய்தியை மார்க் ஜோகன்பெர்க்கே தெரிவித்ததாக வேறு கூறியுள்ளது.

நஷ்டம் உனக்குத்தான் சொல்லிப்புட்டேன்:

கிட்டதட்ட மில்லியன் கணக்கான பயன்பாட்டாளர்களைக் கொண்ட பேஸ்புக் மட்டும் நிஜமாகவே கட்டண மயமானால், அப்போதுதான் உண்மையாகவே நஷ்டத்தை சந்திக்கும் நிலைமையை ஏற்படும்.

பேஸ்புக் அடிமைகள்:

"ஐ அம் டிரிங்கிங் காபி யா" என்று காலையில் எழுவதுமுதல், ஒரு பேனா வாங்கினால் கூட பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்பவர்கள்தான் இங்கு அதிகம்.

வாழ்க்கையின் அங்கமான பேஸ்புக்:

காலை பேப்பர், டிபன், காபி மாதிரி பேஸ்புக் என்பது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

பூமியையே புரட்டிப் போடும்:

இந்த கட்டண முறை மட்டும் நடைமுறைக்கு வந்தால் இளைஞர்கள், வர்த்தக நிறுவனங்கள், பத்திரிக்கையாளர்கள், சிறு, குறு தொழிலாளர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது கண்கூடான உண்மை. பூமியின் சுழற்சியே நின்றாலும் நின்று விடலாம்.

வேண்டாம் நான் அழுதுருவேன்:

ஒரு ஐந்து நிமிடம் பேஸ்புக்கில் தடங்கல் ஏற்பட்டால் கூட தடுக்கி விழும் "ரசிகர்கள்" பட்டாளத்தைக் கொண்ட பேஸ்புக் மட்டும் இந்த கட்டண முறையைக் கொண்டு வந்தால் தன் கையை தானே உடைத்துக் கொண்ட நிலைமைக்குத்தான் செல்லும். பலபேர் சட்டையைக் கிழித்துக் கொண்டு அலையும் நிலைமை கூட உருவாகலாம்.

வெறும் "லுலுலுலு" நம்பாதீங்க:

மாதத்திற்கு 180 என்றால் கூட வருடத்திற்கு 2160 ரூபாய் ஆகின்றது. ஆனால், உண்மையிலேயே கட்டணமயமானால் பாதிக்கப்படப்போவது பேஸ்புக் நிறுவனம்தான். எனினும் இச்செய்தியானது புரளிதான் என்றும் பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரியோ திரினு திரிச்சுட்டாங்கப்பா:

உலகையே இணைத்துக் கொண்டிருக்கும் பேஸ்புக் எந்த நிலையிலும் கட்டணமயமாக்கப்படாது என்றும் பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறாக திரித்துக் கூறப்பட்ட இத்தகவலை வேறு உண்மை என்று நம்பி சிலர் இப்போதே கவலையில் ஆழ்ந்து போய் உள்ளனர்.

இருந்துட்டுப்போது இலவச விளம்பரம்தான்:

மொத்தத்தில் பேஸ்புக்கிற்கு இது ஒரு இலவச விளம்பரமாகத்தான் ஆகிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

புள்ளை, குட்டிகளை படிக்க வைங்கப்பா:

இப்போ கடைசி முடிவா எல்லாருக்கும் என்ன சொல்ல வரோம்னா பேஸ்புக் எந்த காலத்திலும் கட்டண சர்வீஸா மாறப்போவதில்லை. சோ, போய் அவங்க அவங்க வேலையை பார்க்க ஆரம்பிங்க "பேஸ்புக்ல"!

English summary
According to National Report, Facebook has planned to charge its users 2.99 (approx Rs 180) per month for using the social platform, which was free till now. The fee will be implemented from November 1. The report quoted Facebook founder and CEO, Mark Zuckerberg, who addressed a press conference in California, stating that the social networking platform has rolled out their new monthly service plan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X