For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'டிஸ்லைக்' வசதி பேஸ்புக்கில் வருமா? மார்க் ஜுக்கர்பெர்க் பதில்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சான் பிரான்சிஸ்கோ: பயனாளர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ள டிஸ்லைக் (dislike), வசதியை பேஸ்புக் ஏற்படுத்தி தர விரும்பவில்லை. பேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ) மார்க் ஜுக்கர்பெர்க் இந்த தகவலை சூசகமாக தெரிவித்தார். அதேநேரம், டிஸ்லைக்கிற்கு ஈடாக வேறு ஒரு வசதியை தரப்போவதாக சொல்ல அவர் மறக்கவில்லை.

பேஸ்புக்கில் லைக், கமெண்ட், ஷேர் செய்ய வசதிகள் உள்ளன. ஆனால், ஒரு போஸ்ட் பிடிக்கவில்லை என்றால் டிஸ்லைக் செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை. கமெண்டில் சென்று ஏதாவது நாம் அதிருப்தியை பதிவு செய்தால்தான் உண்டு.

யூடியூப்பில் உள்ளது

யூடியூப்பில் உள்ளது

அதேநேரம், யூடியூப்பில் டிஸ்லைக் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்ற வசதி பேஸ்புக்கிலும் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக, பயனாளர்களால் வைக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக் நிறுவனத்திற்கு பல பயனாளர்கள் இ-மெயில் மூலம் இக்கோரிக்கையை தெரிவித்து வந்தனர்.

ஆலோசனை

ஆலோசனை

இந்நிலையில், மார்க் ஜுக்கர்பெர்க் தனது சொந்த ஊரான, கலிபோர்னியாவின், மென்லோ பார்க் பகுதியில், ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, ஆன்லைன் மூலம் அவருக்கு வந்த கேள்விகளை படித்து பதில் சொன்னார்.

ஆன்லைன் கோரிக்கை

ஆன்லைன் கோரிக்கை

ஆன்லைனில் ஒரு பயனாளர் அனுப்பிய கேள்வியில், டிஸ்லைக் வாய்ப்பு வழங்க கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது. ஐயம் ஸாரி, இன்டரஸ்டிங் போன்ற பொத்தான்களையும் அளிக்குமாறு அந்த பயனாளர் கேட்டுக்கொண்டார். இதை படித்து பார்த்த மார்க் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

டிஸ்லைக்

டிஸ்லைக்

மார்க் கூறுகையில், இறுதியாக உங்கள் கோரிக்கை எங்கள் காதுகளில் விழுந்துவிட்டது. டிஸ்லைக் பொத்தானை பொருத்த வேண்டும் என்பது பல கோடி மக்கள் கோரிக்கையாக உள்ளது. இன்று சிறப்பான ஒருநாள், ஏனெனில், அந்த கோரிக்கையை நோக்கி நாங்கள் பயணப்பட்டுக்கொண்டுள்ளோம் என்பதை அறிவிக்கும் நாள் இது.

டிஸ்லைக் தளம் கிடையாது

டிஸ்லைக் தளம் கிடையாது

அதேநேரம், லைக் அல்லது டிஸ்லைக் போட்டு, வாக்களிக்கும் ஒரு தளமாக பேஸ்புக்கை உருவாக்க விரும்பவில்லை. அப்படியான ஒரு சமூகத்தை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம், சோகம், இறப்பு போன்ற தகவலை பதிவு செய்யும்போது, லைக் பொத்தானை அழுத்துவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை இருப்பது மாற்றப்பட வேண்டும்.

புதுமாதிரி பொத்தான்

புதுமாதிரி பொத்தான்

ஒரு போஸ்ட்டிலுள்ள தகவலை புரிந்துகொண்டு, அதற்கான தனது மனநிலையை வெளிப்படுத்தும் வகையிலான பொத்தான் உருவாக்கப்படும். அது மிகவிரைவில் சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட உள்ளது. அதன் வெற்றியை பொருத்து, மேலும் புதிய முயற்சிகளை உருவாக்குவோம். இவ்வாறு மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்தார்.

ஆக மொத்தத்தில், பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் வரப்போவதில்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.

English summary
Facebook, pressed for years by users to add a "dislike" button, announced Tuesday it was working on the feature and will be testing it soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X