For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிகரிக்கும் கொலை மிரட்டல்- ரூ. 57,000 கோடி செலவு.. மார்க்கின் பாதுகாப்புக்கு வாரி இறைத்த பேஸ்புக்!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக மட்டும் பேஸ்புக் வருடம் முழுக்க 57 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக ரூ. 57,000 கோடி செலவு- வீடியோ

    நியூயார்க்: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக மட்டும் பேஸ்புக் வருடம் முழுக்க 57 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது.

    பேஸ்புக் நிறுவனம் சமீப காலமாக நிறைய புகார்களில் சிக்கி வருகிறது. பயனாளர்களின் தகவலை திருடிய பிரச்சனை பெரிதானதில் இருந்து அந்த நிறுவனம் மிகவும் கவனமாக சோதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக மட்டும் பேஸ்புக் எவ்வளவு செலவு செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. அவரது பயண செலவுகள் குறித்தும் இதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    1 டாலர் சம்பளம்

    1 டாலர் சம்பளம்

    பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மாதம் 1 டாலர் மட்டுமே சம்பளம் வாங்குகிறார். அந்த நிறுவன பங்குகளில் இருந்து அவருக்கு கோடிக்கணக்கில் பணம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் முறையாக சம்பளம் என்று அவர் வாங்கும் தொகை ஒரு ரூபாய் மட்டுமே ஆகும். அவர்தான் பேஸ்புக்கின் நிறுவனர் என்பதால், இது அவருக்கு பெரிய பிரச்சனை கிடையாது.

    இதற்கு முன்பு இருந்த செலவு

    இதற்கு முன்பு இருந்த செலவு

    பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், இதற்கு முன்பே பாதுகாப்பிற்காக அதிக தொகை செலவிட்டார். சென்ற வருடம் முழுக்க இவர் பாதுகாப்பிற்காக 38 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. இதில் இவரது பயண செலவுகளும் அடங்கும். அவருக்கு என்று தனியாக பாதுகாப்பு படை அமைக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த வருடம் எவ்வளவு

    இந்த வருடம் எவ்வளவு

    2017ம் வருடம் அவருக்கு மொத்தம் 57 ஆயிரம் கோடி ரூபாய் பாதுகாப்பிற்காக செலவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் கொஞ்சம் தொகை மட்டுமே அவரது தனிப்பட்ட பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பேஸ்புக்கின் சிஏஓ, சிஓஓ ஆகியோருக்கு ஆயிரம் கோடி கணக்கில் பாதுகாப்பிற்காக செலவு செய்யப்பட்டு உள்ளது.

    ஏன் இவ்வளவு தொகை

    ஏன் இவ்வளவு தொகை

    பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு சமீப காலங்களில் அதிக கொலை மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக தகவல் திருட்டு பிரச்சனைக்கு பின் அவரை உலக நாடுகள் பல குறி வைத்து இருக்கிறது. இதனால் அவருக்கு எந்த விதமான பிரச்சனையும் ஏற்படலாம் என்பதால், இந்த அளவிற்கு அதிக பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    Facebook pays 8.8 billion crores for Mark Zuckerberg's personal security. Last year it paid 5.5 billion for the security. After heavy security problems, due to data breach, Facebook gave this much amount for the new security set up.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X