For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேஸ்புக் “வொர்க் பிரம் ஹோம்” மூலம் மாதம் 3 லட்சம் சம்பளம்- உண்மையா, பொய்யா?

Google Oneindia Tamil News

நியூயார்க்: பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் இணையதளங்களில் நேரம் செலவிடுபவர்களுக்காகவும், ஆங்கில மொழியில் சிறிதளவேனும் புலமை பெற்றவர்களுக்காகவும் வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இது உணமையா என்று தெரியவில்லை.

இச்செய்தி வெறும் வதந்திதான் என்று ஒரு செய்தி உலா வருகிறது. இல்லை உண்மைதான் என்றும் செய்திகள் வருகின்றன. இதுதொடர்பாக பேஸ்புக் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.

முன்னதாக வீட்டில் இருந்தவாறே உங்களது கம்ப்யூட்டர் மூலம் சில இணையதளங்களில் புகுந்து, அதில் காணப்படும் சில செய்தி, கதை, தகவல் "லிங்க்" களை பிற இணையங்களுக்கு பரிமாறினால் போதுமாம்.

இந்த பணியை உங்களுக்கு வசதியான வேலை நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு ஒவ்வொரு வாரமும் 5 மணி நேரம் முதல் 50 மணி நேரம் வரை வீட்டில் இருந்தபடியே உழைத்து நீங்கள் வருமானம் ஈட்ட முடியுமாம்.

ஊதியம் நேரடிக் கணக்கில்:

ஊதியம் நேரடிக் கணக்கில்:

பேஸ்புக் உங்களது உழைப்புக்கான ஊதியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகவும், பேபால் மூலமாகவும் வாரந்தோறும் செலுத்திவிடுமாம்.

பெயர் பதிவு அவசியம்:

பெயர் பதிவு அவசியம்:

குறிப்பாக இந்தியர்களை குறிவைத்து "Work From Home" என்ற இந்த புதிய திட்டத்தை சமீபத்தில் அறிவித்துள்ள இந்நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற முதலில் இந்த திட்டத்தில் உங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டுமாம்.

கொஞ்சம் செலவாகும்பா:

கொஞ்சம் செலவாகும்பா:

பின்னர், ஒரு சிறிய தொகையை செலுத்தினால், இந்த வேலை தொடர்பான கையேடு மற்றும் செய்முறை விளக்கம் குறித்த விபரங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமாம்.

வேலையைத் தொடங்குங்க:

வேலையைத் தொடங்குங்க:

அதில் உள்ள விபரங்களின்படி நீங்கள் இதுதொடர்பான இணையத்துக்குள் நுழைந்து உங்களது வேலையை தொடங்க வேண்டியதுதான். உங்களது ஊதியத்தை எவ்விதமான பணப்பரிமாற்றம் மூலம் பெற விரும்புகிறீர்கள் என்பதை குறிப்பிட்டு விட்டால், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உங்கள் வேலைக்கான சம்பளத்தை "பேஸ்புக்" நிறுவனம் தவறாமல் செலுத்திவிடுமாம்.

மாதம்தோறும் லட்சத்தில் சம்பளம்:

மாதம்தோறும் லட்சத்தில் சம்பளம்:

கடந்த ஆண்டு, வேலையை இழந்துவிட்ட மும்பையைச் சேர்ந்த பிரதிப் பாலி என்பவர், பேஸ்புக் வைத்த பேட்டா தேர்வில் பங்கேற்று இந்த வேலையில் சேர்ந்துள்ளார். இந்த புதிய திட்டத்தின் மூலமாக வீட்டில் இருந்தபடியே தனக்கு வசதியான நேரத்தில் வேலை செய்து, மாதந்தோறும் சுமார் 3 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது உண்மையா, பொய்யா என்று தெரியாததால் கவனமாக இதில் இறங்கவும்.

English summary
Facebook gives work from home offer for the house hold people. you can earn money by doing this work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X