For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர் புகார் எதிரொலி.. பேஸ்புக்கில் இருந்து 87 லட்சம் குழந்தை நிர்வாணப் படங்கள் நீக்கம்

பேஸ்புக்கில் இருந்து சுமார் 87 லட்சம் குழந்தை நிர்வாணப் படங்கள் நீக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாஸாக களமிறங்கும் பேஸ்புக்கின் லாஸ்ஸோ ஆப்.. என்ன சிறப்பு!- வீடியோ

    சான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக் சமூகவலைதளத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 87 லட்சம் குழந்தை நிர்வாணப் படங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய சமூகவலைதளப் பக்கமான பேஸ்புக்கில், குழந்தைகளின் நிர்வாணப் படங்கள் அதிகளவில் காணப்படுவதாக புகார் கூறப்பட்டது. காமன்ஸ் ஊடகக்குழுவின் தலைவர் டேமியன் காலின்ஸ், இதற்காக 'பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை கடுமையாக சாடினார். அதன் தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினை அந்நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    facebook removes 87 lakh child abuse images in 3 months

    இது தொடர்பாக பிபிசி நடத்திய ஆய்வில் பேஸ்புக்கில் ரகசிய குழுக்களால் குழந்தைகளின் ஆபாச படங்கள் பகிரப் படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பேஸ்புக் நிறுவனம், சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நீக்கும் பணியில் ஈடுபட்டது.

    [டிக்டாக் ஆப்பிற்கு போட்டி.. மாஸாக களமிறங்கும் பேஸ்புக்கின் லாஸ்ஸோ ஆப்..என்ன சிறப்பு!]

    இதையடுத்து கடந்த 3 மாதங்களில் 87 லட்சம் குழந்தை நிர்வாண படங்கள் 'பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கென அந்நிறுவனம் புதிதாக ஒரு மென்பொருளையும் உருவாக்கி உள்ளது. அதன் மூலம், பேஸ்புக்கில் எந்தவொரு குழந்தையின் நிர்வாண படங்களோ, ஆபாச படங்களோ பதிவேற்றம் செய்யப்பட்டால், அவை தானாகவே நீக்கப்பட்டு விடும்.

    English summary
    Facebook Inc (FB.O) said on Wednesday that company moderators during the last quarter removed 8.7 million user images of child nudity with the help of previously undisclosed software that automatically flags such photos.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X