For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைரலான 10 வருட போட்டோ சேலஞ்ச்.. பேஸ்புக்கில் ஷேர் செய்வதால் ஆபத்தா? பரபர பின்னணி!

பேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து, பேஸ்புக் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வந்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: பேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து, பேஸ்புக் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வந்துள்ளது.

முகம் தெரியாத நபர்களுடன் தொடர்புபடுத்தும் சமூக வலைத்தளமானது பேஸ்புக். அதே சமயம் முகம் தெரியாத நபர்களோடு ஏற்படும் தொடர்புகள், பலரின் வாழ்க்கையையும் குடும்பங்களையும், குலைத்துப் போடவும் செய்கிறது.

இந்தநிலையில், #10YearChallenge என்ற ஹேஷ்டேக் பேஸ்புக் வைரலாகி உள்ளது. இதை பேஸ்புக் நிறுவனம் வேறுவிதமாக பயன்படுத்த போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

என்ன வைரல்

என்ன வைரல்

பேஸ்புக்கில் மக்கள் #10YearChallenge என்ற டேக்கின் கீழ் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்கள். இந்த ஹேஷ்டேக் பேஸ்புக்கீழ் உலகம் முழுக்க வைரலாகி உள்ளது. 2009 - 2019 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மக்கள் பதிவேற்றி வருகிறார்கள்.

என்ன குற்றச்சாட்டு

என்ன குற்றச்சாட்டு

இந்த நிலையில் இது தகவல் திருட்டுக்கும், பேசியல் ரெகக்னைஷேஷன் (facial recognition) தொழில்நுட்பத்தின் முறைகேடான அப்டேட்டிக்கும் உதவுவதாக கூறப்படுகிறது. உங்கள் வயது தொடர்பான பண்புகள் மற்றும் முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விவரங்களை சேகரிக்க இது உதவும் என்று கூறப்படுகிறது. பிரபல எழுத்தாளர் கேட் ஓ நெய்ல் இதுகுறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

தவறு

தவறு

கேட் ஓ நெய்ல் கூற்றுப்படி ''பேஸ்புக் மக்களின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்து தனது பேஸ்புக் பேசியல் ரெகக்னைஷேஷன் தொழில்நுட்பத்தை அப்டேட் செய்கிறது. ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது. பேஸ்புக் அதை மேலும் தவறாக பயன்படுத்த பார்க்கிறது'' என்று கூறியுள்ளார்.

புதிய

புதிய

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேம் பிரிட்ஜ் அனலிட்டிகா போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் சென்றது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் நமது முக மாற்றம் குறித்த விவரங்கள் சென்றுவிடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Facebook’s 10 year challenge: Mark may use your photo for facial recognition update.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X