For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவின் உளவு அமைப்புக்கும், பேஸ்புக்கிற்கும் வித்தியாசம் இல்லை: கொதிக்கும் ஐரோப்பிய நாடுகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

லண்டன்: அமெரிக்காவின் பாதுகாப்பு ஏஜென்சி அமைப்பான என்.எஸ்.ஏ எப்படி மக்களை உளவு பார்க்கிறதோ அதேபோலத்தான் பேஸ்புக்கும் உளவு பார்ப்பதாக பெல்ஜிம் நாட்டு தனியுரிமை கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.

பேஸ்புக் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சமூக வலைத்தளமாக மாறியுள்ளது. ஆனால், இந்த வலைத்தளம், பிறரின் ரகசியங்களை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய யூனியனிலுள்ள 28 நாடுகளின் தனியுரிமை அமைப்புகள் இக்குற்றச்சாட்டை பலமாக முன்வைத்து வருகின்றன.

Facebook snoops on people just like NSA: Belgian watchdog

பேஸ்புக்கில் கணக்கு வைக்காதோர் வெப்சைட்டில் இருந்தும் தகவல்களை அது எடுத்துக்கொள்வதாகவும், சமூக விரோத செயல்களுக்கு இது பயன்படும் என்றும் குற்றம்சாட்டி, ஐரோப்பிய யூனியனின் ஒரு நாடான பெல்ஜியத்தை சேர்ந்த, பெல்ஜியன் பிரைவசி கமிஷன் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் ஐரோப்பிய யூனியனின் சட்ட திட்டங்களை பேஸ்புக் மீறிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரடெரிக் டெபுஸ்ரே, அமெரிக்காவின் பாதுகாப்பு ஏஜென்சியான என்.எஸ்.ஏ எவ்வாறு, உலகமெங்கும் உள்ள மக்களிடம் உளவு பார்க்கிறதோ, அதேபோல பேஸ்புக்கும் உளவு பார்ப்தாக குற்றம்சாட்டி வாதிட்டார்.

லைக், கமெண்ட் போன்றவற்றின் மூலமாக, பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாதவர்களின் கணக்குகளும் உளவு பார்க்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். ஆனால் பேஸ்புக் இதனை தொடர்ந்து மறுத்துவருகிறது.

English summary
Facebook is spying on people in "the very same way" that the US's National Security Agency (NSA) does, said the Belgian data protection watchdog at a court hearing where the social network stands accused of violating the privacy of internet users.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X