For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரொம்ப நேரமா யூஸ் பண்ணுறீங்க.. பேஸ்புக்கில் நீங்கள் செலவிடும் நேரத்தை கண்காணிக்கும் மார்க்

நீங்கள் பேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை இனி பேஸ்புக்கே உங்களுக்கு தெரிவிக்கும்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    உங்கள் பேஸ்புக் பயன்பாட்டை கணக்கிட வரும் புதிய வசதி- வீடியோ

    நியூயார்க்: நீங்கள் பேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை இனி பேஸ்புக்கே உங்களுக்கு தெரிவிக்கும்.

    காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் பேஸ்புக் மட்டுமே ஒரே வேலை என்று திரியும் நபர்கள் நம் உலகில் ஏராளம். எல்லா நேரமும் பேஸ்புக் மட்டுமே உற்ற நண்பன் என்று இவர்கள் வாழ்வதுண்டு.

    மக்கள் இப்போது பேஸ்புக்கில் செலவிடும் நேரம் மிகவும் அதிகமாகிவிட்டது. இதற்காக ''பேஸ்புக்கில் உங்கள் நேரம்'' என்ற பொருள்படும் வகையில் டைம் ஆன் யுவர் பேஸ்புக் என்ற வசதி இன்னும் சில நாட்களில் கொண்டு வரப்பட உள்ளது.

    என்ன செய்ய முடியும்

    என்ன செய்ய முடியும்

    இந்த வசதி நீங்கள் பேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்று கணக்கிடும். அதேபோல் ஒரு வாரத்தில் எவ்வளவு நேரம் பேஸ்புக் பார்க்கிறீர்கள் என்றும் கணக்கிடும். மேலும் ஒரு நாளைக்கு எவ்வளவு லைக் செய்கிறீர்கள், எவ்வளவு வீடியோ பார்க்கிறீர்கள் என்று பேஸ்புக் கணக்கிட்டு இந்த வசதி மூலம் உங்களுக்கு சொல்லும்.

    ஏன் செய்கிறது

    ஏன் செய்கிறது

    நாம் மிகவும் அதிக அளவு பேஸ்புக்கிற்கு அடிமை ஆக கூடாது என்பதற்காக பேஸ்புக் இந்த வேலையை செய்கிறது. அதே சமயம், பேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வசதி வருகிறது. நாம் எவ்வளவு நேரம் பயன்படுகிறோம் என்பதை பேஸ்புக் நமக்கு வார்னிங் போல தெரிவித்துக் கொண்டே இருக்கும் என்றும் கூறப்படுகிறது .

    இன்னும் கூட மாற்றம்

    இன்னும் கூட மாற்றம்

    அதேபோல் பேஸ்புக்கில் சமீப காலமாக சில பிரச்சனைகள் அவ்வப்போது உருவாகிறது. இந்த பிரச்சனைகளை போக்குவதற்காக பிரச்சனைகளை கண்டறியும் குழு ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இந்த குழு தானாக, ஒரு பிரச்சனை உருவாவதற்கு முன்பு அதை கண்டறியும். மக்களுக்கு அந்த பிரச்சனை உருவாகும் முன் அதை சரி செய்ய இந்த குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    மீண்டும் பெரிய அளவில்

    மீண்டும் பெரிய அளவில்

    பேஸ்புக் தகவல் திருட்டு பிரச்சனையால், கடந்த சில மாதங்களாக பேஸ்புக்கில் இருந்து நிறைய பயனாளிகள் வெளியேறி இருக்கிறார்கள்.பேஸ்புக்கிற்கு நிறைய அவப்பெயர் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனைகளை சரி செய்யும் விதமாக தற்போது பேஸ்புக் நிறைய புதிய வசதிகளை உருவாக்கி வருகிறது. இதனால் பேஸ்புக் மீண்டும் ஒரு ரவுண்ட் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

    English summary
    Facebook is gonna introduce a new feature which tells how much time you are wasting time on the app.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X